பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 குற்றம் பார்க்கில் "கொடுத்திட்டாப் போச்சு." "சீச்சி, பணங்கொடுத்து வேலை வாங்கறதாவது? வானாம். இந்த வேலையிலே சேரக் காக வேணும். வேற வேலை வரட்டும்: வாங்க கவனிச்சுக்கிறேன்." r "காசைப் பத்திக் கவலைப்படாதீங்க கொடுத்திடலாம். "நீங்க சொல்றதைக் கேட்க, மனசுக்குக் கஷ்டமா இருக்கு. "பரவாயில்லீங்க, வேலை கிடைக்காம இருக்கிறது அதைவிடக் கஷ்டங்க." 'பிரபாகர் சுற்று முற்றும் பார்த்தார். குரலைத் தனித்தார். "நீங்க வற்புறுத்துகிறதனால சொல்றேன். முதல்லே அவனுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. மூவாயிரம் ரூபாயை உங்கள்ல ஒருவர் பேருக்கும் என் பேருக்கும் பேங்க்ல ஜாயின்ட் அக்கவுண்ட்ல போட்டிடலாம். வேலை கிடைச் சா அதை எடுத்துக் கொடுத்திடலாம்." கையாள் குறுக்கிட்டான். "அதோடு ஐயாவுக்கு நூறு ரூபாய் கொடுத்திடுங்க. டாக்ஸியில் கண்டவனை எல்லாம் போயிப் பார்க்கனுமே." "இந்தாங்க முந்நூறு. நூறு எந்த மூலைக்கு? நாளைக்கு மூவாயிரம் ரூபாயோட வர்றோம். ஜாயின்ட் அக்கெளண்ட்ல போட்டுடலாம்." பிரபாகர், வருங்கால என்ஜினியரைப் பார்த்து, "இந்தா பாருப்பா, நீ இன்டர்வியூவுக்குப் போகும்போது மானேஜிங் டைரக்டர் கிட்ட நான் போன் பண்ணினதைச் சொல்லாதே; அவருக்குப் பிடிக்காது." என்ஜினியர் பையன் தலையை ஆட்டினான். கையாள் குறுக்கிட்டான். "சரி.நாளைக்குப் பணத்தோட வாங்க. ஐயாவுக்கு இப்போ ஒரு மீட்டிங் இருக்கு." அவர்கள் திரும்பிச் சென்றார்கள். கையாள் கியூவில் நின்ற இருவரைக் கூட்டிக் கொண்டு