பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.-சமுத்திரம் : 131 வந்தான். வந்தவர்கள் ஒரு தாளை நீட்டினார்கள். பிரபாகர், "கஷடம்" என்று ஆரம்பித்தார். பிரபாகரின் கையைப் பிடித்தார் ஒருவர் "ஐயா. இந்தக் கையைக் காலுன்னு நினைச்சிப் பிடிக்கிறேன். நீங்க உதவாட்டா இந்தப் பய நடுத்தெருவில்தான் நிக்கணும்." “ 8 flüur, இவனை எதுக்காகச் சஸ்பென்ட் செய்தாங்களாம்?" "இவன் நைட் வாட்ச்மேன் வேலையை ஒழுங்காச் செய்றானான்னு செக் பன்றதுக்கு அவங்க ஆபீலர் ராத்திரி ஒரு மணிக்கு வந்திருக்காரு. தூங்கிட்டு இருந்த அவன் அரவம் கேட்டு எழுந்திருச்சி ஆபீஸ்ரைத் திருடன்னு நினைச்சி, ஒரு பல்லுல பாதியை உடைச்சிட்டான். இவன ஆபீசரு, வேணுமின்னு அடிச்சதாச் சொல்லிச் சஸ்பென்ட் செப்திருக்காரு." "சிக்கலான கேஸ். நான் ஒண்ணும் பண்ண முடியாது." "ஐயா அப்படிச் சொன்னா, இந்தப் பய நடுரோட்லதான் நிப்பான் எல்லாருக்கும் உதவி செய்ற மாதிரி இவனுக்கும் செய்யணும்." - "என்னப்பா இது? சரி, நான் யாருக்குப் போன் பண்ணனும்?" "டெபுடி செகரட்டரிக்கிட்ட சொன்னால் போதும்" என்றான் முன்னாள் வாட்ச்மேன். கையாள் கொடுத்த ரிசீவரை எடுத்துப் பிரபாகர் ஊதினார்: "ஹலோ நான்தான் பிரபாகர். நாளைக்கு டின்னருக்கா? நோ பிளீஸ்! ஒரு சிலையைத் திறந்து வைக்கக் கூப்பிட்டிருக்காங்க. அப்புறம், உங்க ஆபீசில நைட் வாட்ச்மேன், அவன் உங்க டிபார்ட்மென்ட் ஆபீஸ்ரை அடிச்சிட்டானாமில்ல. நோ.நோ.அந்த ஆபீசருக்காகப் பேசல. அந்த வாட்ச்மேனை எப்படியும் சேர்த்திடனும், என்ன போலீஸ் கேஸா? அந்த இன்ஸ்பெக்டர் தானே? என் பிரண்ட். ஒகே, பைல் வந்ததும் கவனிச்சிக்குவீங்களா? நன்றி, அடுத்த வாரம் வரேன்." பிரபாகர் முகத்தைச் சுளித்தார். கடிகாரத்தைப் பார்த்தார் வாட்ச்மேனும் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு டேபிள் வெயிட்டைப் பார்த்தார். வாட்ச்மேனும் டேபிள் வெயிட்டைப்