பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 குற்றம் பார்க்கில் பார்த்தான். "என்னப்பா இது, பேஜாரு பிடிச்ச விஷயம். போலீஸ் கேஸாயிட்டதாம். அந்த இன்ஸ்பெக்டர் என் சினேகிதர்தான். ஆனால், நண்பரானாலும் காசு கேக்காம இருக்க மாட்டான். ரேட்டை வேணும்னா குறைப்பான்." "குடுத்திடலாங்க. என் பெண்டாட்டி கழுத்தில தங்கத் தாலி இருக்கு " "நீ சொல்றதைக் கேட்கக் கஷ்டமா இருக்கு." "பரவாயில்லீங்க, குடுத்திடலாம்." பிரபாகர் குரலைத் தணித்துக் கொண்டு, "உனக்குச் சஸ்பென்ட் ஆர்டர் ரத்தாகிறவரைக்கும் பணம் கொடுக்கக் கூடாது. ஒரு ஐநூறை என் பேர் லேயும், உன் பேர்லேயும் பேங்க் ஜாயின்ட் அக்கெளண்ட்ல போட்டிடலாம். வேலையில சேர்ந்ததுக்கப்புறம் எடுத்துக் கொடுத்திடலாம் முதல்லே கொடுக்க வேண்டாம். எல்லாம் திருட்டுப் பசங்க." * வாட்ச்மேனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "ஜாயின்ட் அக்கெளண்ட் டெல்லாம் எதுக்குங்க? ஐயாகிட்ட ஐநூறையும் கொடுத்திடறேன். நீங்க என்ன வேணுமுன்னாலும் செய்யுங்க." கையாள் இடைமறித தான். "ஐநூறு அந்த ஆபீசருக்கு. ஐயா டாக்சில போய்ப் பேசவேண்டியதைப் பேசிப் பெற வேண்டியதைப் பெறணும். அதுக்கும் ஒரு நூறு ரூபாய் கொண்டு வாங்க" என்றான். பிரபாகர் வாட்ச்மேனோடு வந்த ஒருவரின் திருநீறு அப்பிய நெற்றியை நோட்டம் விட்டுக் கொண்டே, "நீங்க என்ன செய்யுறீங்க?" என்றார் * "நான், நான் எம்பிரான் சிவனைத் தேடி அலையறேன் திருவாசகமும் தேவாரமும் படிச்சிப் பார்க்கிறேன். எம்பிரானுக்கு இன்னும் என் மேல மனசு இரங்கல " பிரபாகர் இரங்கினார்