பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 133 "நான் வேணுமுன்னாச் சொல்றேன். அவரு டெலிபோன் நம்பரைச் சொல்லுங்க." கையாள், அவர்களை அவசர அவசரமாக அனுப்பிவிட்டு, வெளியே நின்ற ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அழைத்து வந்தான். "வணக்கங்க." "வணக்கம்." "ஸ்ார். அறம் செய்வோர் சங்கச் செயலாளர் அன்பு நம்பி உங்களைப் பார்க்கச் சொன்னார். இவள் என் மனைவி, பேரு பிரபtளா.." பிரபாகர், அந்தப் பெண்ணை நோட்டம் விட்டார். மற்றதை மறந்து விட்டார். பிறகு நினைத்துக் கொண்டவராய் "என்ன விஷயம்?" என்றார். "இவளுக்கு ஒரு டைப்பிஸ்ட் வேலைக்கு இன்டர் வியூ வந்திருக்கு. இந்தாங்க, இதில் விவரமா இருக்கு அந்தச் செக்ஷன் ஆபீசர் கிட்ட நீங்க ஒரு போன் போட்டாப் போதும். விஷயம் முடிஞ்சிடும்." பிரபாகர் முகத்தைச் சுளித்து உதட்டைப் பிதுக்கினார். கையாள் கொடுத்த போனைச் சுற்றினார்: பேசினார். அவர் பேசுவதையே உற்றுக் கேட்ட தம்பதியர், அவர் பேசி முடித்ததும், அவர் முகத்தைப் பார்த்தார்கள். "ஏகப்பட்ட போட்டியாம். கஷ்டங்கிறார்." "நீங்க அப்படிச் சொன்னா நாங்க எப்படிப் பிழைக்கிறது?" என்றாள் டைப்பிஸ்ட் ஆகப் போகும் மங்கை. "செக்ஷன் ஆபீசர் ஒரு பணம் பிடுங்கி." "நீங்க கொடுக்க வேண்டியதைச் சொல்லுங்க கொடுத்திடலாம்." "அதிருக்கட்டும். என்ன படிச்சிருக்கீங்க?" "பி.யூ.சி."