பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 குற்றம்-பார்க்கில் "முன்னால் எங்கேயாவது டைப்பிஸ்டா வேலை பார்த் திருக்கீங்களா?" "ஜாப் டைப்பிங் பண்றேன்." "ரெபரன்ஸ், அதாவது பெரிய மனிதர்கள் யாரையாவது தெரியுமா? எதுக்குக் கேட்கிறேன்னா, கண்டவங்கல்லாம் வர் றாங்க. நானும் இரக்கப்பட்டு ஏதோ செய்யறேன். கடைசியில என் பேரை ரிப்பேராக்கிடுறாங்க." "நீங்க கவலையே படவேண்டாம் லார். இவள் ரொம்ப . நல்லவள். அதனால்தான் நான் லவ்-மேரேஜ் பண்ணிக்கிட்டேன்." "அந்தச் செக்ஷன் ஆபீசர் பணந்தின்னி, ஒரு ரெண்டாயிரமாவது போடணுங்றான்." "லார், ஹஸ்பெண்டுக்கும் வேலையில்ல: ஒப்புக்கும் வேலையில்லே, எப்படி லார் பணம் போடறது?" என்றான் கணவன். பிரபாகர் சிறிது யோசித்தார். பிறகு, "ஆல்ரைட், சாயங்காலம் வாங்க, யோசிக்கலாம்" என்றார். கையாள் குறுக்கிட்டான். "லார், உங்களுக்கு நேரமாயிட்டது. இந்நேரம் அந்தச் சிலையை நீங்க திறந்து வச்சிருக்கணும்." தம்பதியர் எழுந்தார்கள். "அப்போ, சாயங்காலம் வரட்டுமா?" "வாங்க. நீங்க வரணுமின்னு அவசியமில்ல. வேலை இருந்தா போங்க. ஒங்க மனைவி மட்டும் வந்தாக்கூடப் போதும். அவங்க சாயங்காலம் வரட்டும். நான் கவனிச்சுக்கிறேன்." மாலை வந்தது. மங்கை இன்னும் வரவில்லை. பிரமுகர் பிரபாகர் தவியாய்த் தவித்தார். ஒருவேளை வராமல் போயிடுவாளோ? காலையிலேயே எங்கேயாவது கொண்டு போயிருக்கனும், பிரபாகர். ஜன்னல் வழியாகக் கழுத்தை நீட்டி நீட்டி அலுத்துப்போன சமயத்தில், அவள் வந்தாள். தலையை மறைக்கும் மல்லிகைப் பூ. பார்த்துக் கொண்டே இருக்கலாம்' என்று