பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 135 தூண்டுமளவுக்கு அலங்காரம். பிரபாகர் நெளிந்தார். ஸில்க் ஜிப்பாவைத் தடவிக் கொண்டார். "வாம்மா வா, உட்காரு." "அதிக நேரமா காத்திருந்தீங்களா லார்?" "நோ நோ. இப்பத்தான் ஒருவருக்குப் பொன்னாடை போர்த்திட்டு வந்தேன். நீ வந்திட்டுப் போயிட்டியோன்னு நினைச்சேன்." "லார், ஜாயின்ட் அக்கெளள்ைட்ல போடப் பணம் இல்லே cηλrrή. 'நாமதான் ஜாயிண்ட் ஆயிட்டோமே, அக்கௌண்ட் எதுக்கு? மினிஸ்டர் லெவல்ல போயி முடிச்சிட மாட்டேனா?" "நீங்க தயவு வைக்கனும் லார்." "தயவு வைக்காமலா வரச் சொன்னேன்? பூ வாசனை பிரமாதமாய் இருக்கே உன் தலையில் இருக்கிறதினால வாசனை அதிகமுன்னு நினைக்கிறேன்." பிரபாகர் இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சியில்' இறங்கிவிட்டு, அவள் தலையில் இருந்த பூ மொத்தையில் ஓர் இதழை எடுத்தார். அப்படி எடுக்கையில் அவர் கை, அவள் தலையை ஆழுத்தியது. அவள் சிரித்தாள். அவருக்கு ஊக்கம்’ அளித்தது போல் உணர்ந்தார். "உன் மோதிரம் நல்லா இருக்கே. கழட்டு பார்க்கலாம்." "கழட்ட முடியலை சார்!" "நான் கழட்றேன்." பிரபாகர், அவள் கையைப் பிடித்து, மோதிரத்தைக் கழற்றும் சாக்கில், அவள் கைக்கு மசாஜ்' செய்தார். அவள் கையைத் தன் பக்கமாக இழுத்து அவளைச் சரித்தார். அவ்வளவுதான். அவள் விசுவரூபம் எடுத்தாள். "யோவ், உன்னை நம்பி வேலைக்குன்னு வந்தா, நீ வேலை கொடுக்கிற லட்சனமா இது? அயோக்ய ராஸ்கல்."