பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 குற்றம் பார்க்கில் பிரபாகருக்கு விரகதாபம் அதிகமாகிவிட்டதால், அவள் சொன்னது, மேலும் அவர் தாபத்தைக் கூட்டியது. "சரிதாண்டி நிறுத்துடி, நீ என்ன பாப்பாவா? கையைக் கொடுத்திட்டு இப்போ கத்துறியே?" * பிரபாகர், அவளை மேலும் சரித்தார். அவள் கூச்சலிட்டாள். "ஐயையோ இந்த அநியாயத்தைக் கேட்க யாரும் இல்லியா? இல்லியா? ஐயையோ!" அவள் அலங்கோலமாகிற சமயம், திடீரென்று ஒருவன் உள்ளே வந்தான். இப்போது, பிரபாகர் அலங்கோலமாக விழுந்தார். தலையில் இரண்டு குத்தும், கழுத்தில் ஒரு வெட்டும் விழுந்ததால், அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவள் கணவன் பயங்கரமாகச் சிரித்தான். பிரபாகர், தள்ளாடி எழுந்து கொண்டே. ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தார். அவர் வாய், ஒரு முரடான முஷடியை விழுங்குவது போல் விரிந்து, பிறகு ரத்தத்தைக் கொட்டியது. "அயோக்ய ராஸ்கல்! பொன்னுக்கிட்ட நடந்துக்கிற முறையா இது?" பிரபாகர் கும்பிட்டார்: "உன் மனைவிகிட்ட நடந்துக் கிட்ட விதம் தப்புத்தாம்பா: தயவு செய்து மன்னிச்சிப்பிடு." "உனக்கு மன்னிப்பா? கிடையாது." "அப்படிச் சொல்லக் கூடாது." "உன்னை மன்னிக்கணும்னா நீ ஒரு காரியம் பண்ணனும்." "நீ என்ன சொன்னாலும் கட்டுப்படறேன். எவ்வளவு ரூபான்னாலும் தர்றேன்." கணவன் எகிறினான். "உன் ரூபாயைக் குப்பைத் தொட்டிலே போடுப்யா. நீ எனக்கு வேற காரியம் பண்ணணும்."