பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க, சமுத்திரம் 137 "சொல்லு, சத்தியமாச் செய்யறேன்." 'நீ எனக்கு ஒரு வேலை வாங்கித் தரணும்." "ஐயையோ எதை வேனுமான்னாலும் கேளு. வேலை மட்டும் கேட்காதே. சத்தியமா யாரையும் தெரியாது." "என்னய்யா காது குத்தறே? டெலிபோன்ல யார் யார் கிட்டல்லாமோ பேசறே?" "ஐயோ! உனக்கு விஷயம் தெரியாது. என் டெலிபோன் நம்பரை நானே சுழற்றி, அப்படிப் பேசுவேன்." "அன்னிக்கு ஒருவன் வேலை கிடைச்சதுக்காக ஆறடி மாலையை, உன் எருமைக் கழுத்தில் போட்டான்." "உனக்கு விஷயம் தெரியாது. மூலிகை விக்கிறவன் தன் ஆளையே வச்சி, மருந்து வாங்கச் சொல்றது மாதிரி என் ஆளே, எனக்கு வந்து மாலை போட்டுட்டுப் போவான். வியாபார தந்திரம்." மங்கை குறுக்கிட்டாள். யோவ், முந்தாநாள் ஒரு பையன் உன்னால் வேலை கிடைச் சிட்டதாக எங்ககிட்டச் சொன்னானே?" e பிரபாகர், அவளைப் பார்க்காமலே, கணவனைப் பார்த்துப் பேசினார். காரணம், வலி இன்னும் தீரவில்லை. "நான் சொல்றதை நம்புப்பா. வர்றவங்ககிட்ட ஜாயின்ட் அக்கெளண்ட் போட்டுக்கிடுவேன். எவனுக்காவது தற்செயலா வேலை கிடைக்கலாம். மதிப்பு எனக்குத்தான். பணமும் வந்துடும். அப்படிப் பார்க்காதே. நான் செய்றது தப்புத்தான். உன் ஒய்ப்கிட்ட தப்பா நடந்தது தப்புத்தான்." கணவன் சிரித்தான். "இந்தா பாருய்யா, இவள் என் ஒப்பே இல்லே. உன்னை மாட்ட வைக்கிறதுக்காக எனக்கு ஒத்தாசை செய்தாள். சரி, அதெல்லாம் உனக்கு எதுக்கு? நீ பேசியது எல்லாம் டேப் ரிக்கார்ட்ல இருக்கு மரியாதையா எனக்கு வேலை வாங்கிக் கொடு. இல்ல, டேப்பு கோர்ட்டுக்குப் போகும். என் கை உன் உடிம்பைப் பதம் பார்க்கும். என்ன சொல்றே?" - r۲ . ۱ O لاس ز)