பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 குற்றம் பார்க்கில் "ஐயையோ தயவு செய்து வேலை மட்டும் கேட்காதே. நிஜமா எவனையும் எனக்குத் தெரியாது." "அந்தக் கதையே வேண்டாம். என் குவாலிபிக்ேஷன் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலு. எக்ஸ்பீரியன்ஸ், ஆட்களை உதைக்கிறது. ரெபரன்ஸ். ஜி.எச் ஹாஸ்பிட்டல்ல. தங்கசாமின்னு ஒருவன் கால் ஒடிஞ்சி கிடக்கறான் ஸ்டான்லிலே ஒருத்தன் பல்வலியால் துடிக்கிறான். வேணுமுன்னா கேட்டுக்க மரியாதையா ஒரு வேலை வாங்கிக் கொடுக்கலே..." "என்கிட்ட இல்லியே. நீயே மிரட்டினா நான் யார் கிட்ட போவேன்?" பிரபாகர் அழாக் குறையாகப் பேசினான். 'ஹஸ்பெண்ட் யோசித்தான். பிறகு அவருக்கு ஒரு யோசனை சொன்னான். வேற வேலை கிடைக்கிழவரைக்கும் என்னையும் உன் உதவியாளாப் போட்டுக்கோ. பிஸினலையும் நடத்து." "எனக்கு ஏற்கனவே ஒருத்தன் இருக்கான். அவனும் உதைச்சா உடம்பு தாங்காது." "அவன் அற்புதமா உதைப்பான். நான் இப்பவே உதைப்பேனே. இந்தா பாரு, இதுதான் கடைசியாச் சொல்றது. நான் உனக்குப் பஸ்ட் அலிஸ்டெண்டா இருக்கேன். அவன் 'செகண்ட்' அலிஸ்டெண்டா இருக்கட்டும். யோசிக்காதே. இவளிடம் தப்பா நடக்கிறதுக்கு முன்னால் யோசித்திருக்கணும். சீக்கிரமாச் சொல்லு. எட்டு மணிக்கு ஒரு 'என்கேஜ்மெண்ட்' இருக்கு." பிரமுகர் பிரபாகர், வேறு வழியில்லாமல் அவனை முதல் உதவியாளர்கச் சேர்த்துக் கொண்டு, சமூக சேவை செய்து வருகிறார். என்றாலும், அவனுக்கு வேறு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து, அவனிடமிருந்து கழற்றிக் கொள்வதற்காக, நிஜமாகவே பல பிரமுகர்களின் கைகால்களைப் பிடித்து வருகிறார். அதற்காகப் பேங்கில் 'ஜாயின்ட் அக்கெளண்ட்டி'ல் பணம் போடவும் அவர் தயாராக இருக்கிறார்.