பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 குற்றம் பார்க்கில்.... "என்ன பொண்ணுடி நீ இதுக்குள்ளே 'பிராக்கை ச் சுவர் ல தேய்த்து நாசம் பண்ணிட்டியா?" என்று சொல்லிக் கொண்டே விமலா, தன் மகள் நளினாவின் கன்னத்திலும் முதுகிலும் பளார் பளாரென்று 'மத்தளம்' கொட்டினாள். நளினா சுவரில் பிராக்கைத் தேய்த்தபோது, விமலா வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். துடைப்பத்தைப் போட்டுவிட்டு, அதே கையோடு மகளுக்குச் 'செமத்தை'யாகக் கொடுத்தாள். நளினாவின் பிராக் மேலும் அழுக்கானது அதுவரை ஓரளவு உற்சாகமாக இருந்த நளினா, மலங்க விழித்தாள். மனோதத்துவ முறையில் சொல்லப் போனால், நிர்மலமாகப் பார்த்தாள் அவள் கண்கள், எதற்கும் எட்டாத தொலை துரத்தைத் துழாவித் தோல்வி யுற்றவை போல் காட்சியளித்தன. நளினாவுக்கு ஒன்பது வயது. டிராய்ல்' எடுக்கப்பட்டுத் தைத்த உடைபோலக் கச்சிதமாக இருந்தாள். நளினா. எவ்வித மாறுதலும் காட்டாமல் இருப்பதைக் கண்ட விமலாவுக்கு மேலும் எரிச்சல் வந்தது "அதுக்குள்ள கண் மையை நெத்தியில் தேய்ச்சிட்டியா" என்று நெற்றியில் ஒரு தட்டுத் தட்டினாள். அந்தக் குழந்தை, அம்மா டிரஸ்' செய்வதையும் உணவூட்டுவதையும் எப்படிக் கடமையாகச் செய்கிறாளோ, அதே போல் அடிப்பதும் அவளுடைய கடமை என்று நினைத்துச் சர்வ சாதாரணமாக நின்று கொண்டிருந்தது. பள்ளிக்கு அழைத்துக் கொண்டு போக ஆயா வந்துவிட்டாள் விமலா அவசர அவசரமாக மகளுக்குப் பூட்ஸ்களை மாட்டினாள். "காலில் ஏண்டி இவ்வளவு அழுக்கு?" என்று கேட்டுக் குதிகாலில் ஒரு கிள்ளுக் கிள்ளினாள். பிறகு புத்தகங்களைப் பார்வையிட்டாள். கணக்குப் புத்தகத்தில் கணக்கில்லாத கிறுக்கல்கள்: சரித்திரப் புத்தகத்தின் அட்டையைக் காணவில்லை. விமலாவுக்கு ஆத்திரம் அதிகமாகியது. "தரித்திரம்...உனக்கு எத்தனை தடவைடி சொல்றது? இதைக்கூட ஒழுங்கா வைக்கத் தெரியாத உதவாக்கரைச் சனியனுக்கு ஒன்பது வயசாகுது. அஞ்சு வயசுப் பெண்ணுக்கு இருக்கிற அறிவுகூட இல்லை" என்று மகள்ைப் பார்த்தும், ஆயாவைப் பார்த்தும் சொல்லிக்