பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 குற்றம்-பார்க்கில் கொண்டே, நளினா ஒரு யோகியைப் போல், ஆயாவைப் பார்த்தாள். நளினா, உதைப் படலத்தை'ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் ஆயாவால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை: அவள் இன்னும் பல வீடுகளுக்குப் போக வேண்டுமே! "நல்ல பொண்ணு, ஏம்மா இப்படிச் சொல்றீங்க?" கேட்டுக் கொண்டே, ஆயா நளினாவுடன் வெளியேறினாள். வாசல் வரைக்கும் வந்த விமலா பொருமினாள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் மம்மிகளுக்கு "டாட்டா" "பைபை" என்று சொல்விக் கொண்டே போகிறார்கள். ஆனால், நளினா அம்மாவுக்கு "டாட்டா" சொல்வது இருக்கட்டும்: திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. விமலாவுக்கு ஆத்திரம் அழுகையானது. 'இந்தப் பொண்ணுக்கு எப்போ புத்தி வரப்போவதோ? லேசாகக் கையை ஆட்டி போயிட்டு வர்றேம்மான்னு சொல்ற புத்தியில்லியே பக்கத்து வீட்டிலுந்தான் அந்தப் பையனை அடிக்கிறார்கள். ஆனால் அந்தப் பையன் ஸ்கூலுக்குப் போகும்போது, எவ்வளவு அழகாக அம்மாவுக்கு மட்டும் பட்டும் பதியாமலும் முத்தம் கொடுத்துவிட்டுப் போகிறான்' வாசலில் இருந்து திரும்பி வந்த விமலா, கதவைத் தாழிட்டுவிட்டு ஹாலில் மாட்டியிருந்த கணவனின் போட்டோவிற்கு எதிரே வந்து நின்றாள். கண்ணிரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை. விம்மி விம்மி அழுதாள். 1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரத பாகிஸ்தான் போரில் அவள் கணவன் வீரமரணம் எய்திய பிறகு, அந்தப் போட்டோவைப் பார்த்துப் பார்த்தே, அவள் கண்ணிiரால் கன்னத்தைச் சுத்தி செய்வது வழக்கம். எமர்ஜென்ஸி கமிஷன் ஆபீசராக ராணுவத்தில் சேர்ந்த தன் கணவன் 'யூனிஃபாரத்தோடு லெப்ட் ரைட் போட்டுக் கொண்டே வீட்டுக்கு வருவான் என்று கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்த அவளுக்கு, வெறும் சீருடைகளே பார் சலில் வந்தன விமலாவுக்கு, இருபத்தொன்பது வயசிருக்கும். அழகாக இருப்பாள். ஆனால், கவர்ச்சியாக இருக்கமாட்டாள் அப்படிப் பார்க்கவும் மாட்டாள் பழகவும் மாட்டாள். கனவனின் பெற்றோர்கள் கொடுத்த வீட்டில், தாய் தந்தையர் தாராளமாகக் கொடுத்த பணத்தைப் பேங்க்கில் போட்டு, ஒரளவு வசதியாக