பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 141 வாழும் அவளுடைய இளமை, இன்னும் செழிப்பாக இருந்தாலும், அவள் அடக்கமாகவும், எளிமையாகவும் பழகியதால் அவளைப் பற்றி உற்றார் உறவினர் கூட இதுவரை கசமுசா என்று பேசியது இல்லை. கட்டுக் குலையாத இருபத்து மூன்று வயக வாலிப உருவைத் தாங்கிய பொலிவு பெற்ற அந்தப் போட்டோவின் முன்னால், கண்ணிர் விட்டுக் கொண்டிருந்த விமலா, மணி ஒலி கேட்டு, முன்றானையால் கண்ணிரைத் துடைத்துக் கொண்டே, கதவைத் திறந்தாள். "வாங்க...வாங்க இப்போதான் வழி தெரிஞ்சுதா?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர்களை வரவேற்றாள். வந்திருந்த அவள் கணவனின் சித்தியும், அவள் மகள் ரேணுகாவும் நாற்காலியில் அமர்ந்தார்கள் "என்ன விமலா, ஒரு மாதிரியா இருக்கே?" என்று கேட்டாள் அந்த அம்மாள். "பேபி ஸ்கூலுக்குப் போயிட்டாளா?" என்று ரேனுகாவும் தொடர்ந்து கேட்டதால் விமலா இரண்டுக்குமே பதில் சொல்லாமல் லேசாகச் சிரித்தாள். "என்ன அண்ணி கண்ணு சிவந்திருக்கு? டாக்டர் கிட்டே டெஸ்ட் பண்ணிக்கக் கூடாது?" என்றாள் ரேணுகா. அவள் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருப்பவள். ரேணுகா அப்படிச் சொல்லும்போது, விமலா கணவனின் போட்டோவைப் பார்ப்பதை அத்தைக் காரி புரிந்துகொண்டு ஆறுதல் சொல்லவம் தொடங்கினாள். * "எப்போ பார்த்தாலும் அவனையே நினைச்சிக் கிட்டிருந்தி எப்படி? என்ன செய்யறது? நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான். பாழாப்போன பகவான் உன் கிட்ட வ்ந்து சோதிச்சிட்டான். நீ ஏம்மா அழறே? அழாதே. அழாதே" அத்தை மேற்கொண்டு பேச முடியாமல் அழாதே அழாதே' என்று சொல்லிக் கொண்டே தான் அழுதாள். இதைப் பார்ததும் விமலா உள்ளங்கையில் நெற்றியைப் புதைத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுதாள். அத்தையம்மா, தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு, "அசடே. ஏன் அழறே? நாம மட்டும் இந்த உலகத்தில் நிரந்தரமாவா இருக்கப் போகிறோம்? அவன் முன்னால போனான். நாம் பின்னால் போகப் போறோம். உன் குணத்துக்கு இப்படி நடக்க வேண்டாம். போனதுதான் போனான் கண் தெரியாத