பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 குற்றம் பார்க்கில் காட்டிலேயா சாகனும்? குண்டு பட்டா சாகனும்? என் பிள்ளை குண்டு விழுந்து எப்படித் துடிச்சானோ, எப்படிச் செத்தானோ, நீ ஏம்மா அழறே? அழாதே அழாதே" இப்போது விமலாவால் சத்தம் போட்டு அழாமல் இருக்க முடியவில்லை. "சில வீடுகளில் நடக்கிறமாதிரி அவர் கோபத்தில் அடித்திருந்தால் கூட மனசு தேறியிருப்பேன் அத்தே. ஒரு நாள் கூட்ச் சத்தமாப் பேசமாட்டாரு. நான்தான் சில சமயம் சத்தம் போடுவேன் அப்போது கூடச் சிரிப்பார். என் கண் கலங்கினா அவரு கண்ணும் கலங்கிவிடும். அவரு காலிங் பெல்லை அடிச்சதும் கதவைத் திறப்பேன்: கை நிறைய மல்லிகைப்பூ வாசனை எப்படி அடிக்கும் என் வாழ்க்கை வாசனை இல்லாமல் போயிட்டுதே அத்தே! நான் தான் எப்படியோ போறேன். நளினா கூட மூளைக் கோளாறு உள்ளவள் மாதிரி நடந்துக்கிறாள். என் விதியை யார் கிட்டே அத்தே சொல்றது?" என்று புலம்பினாள். ரேணுகாவுக்கு மனம் என்னவோ போலிருந்தது. வறட்சியில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட இனம் புரியாத வேதனை மீண்டும் அவளுக்கு ஏற்பட்டது. என்றாலும் விமலாவை ஒரு நோயாளியாகக் கற்பனை செய்து கொண்டு, "அண்ணி எனக்குப் பசிக்குது ஏதாவது சாப்பிடக் கொண்டு வாங்க" என்று பேசி ஒரே பேச்சில் இரண்டு காரியங்களை நிறைவேற்றிக் கொண்டாள். அத்தையும் ரேணுகாவும் சாவகாசமாக மாலைவரை தங்கி இருந்தார்கள் அவர்கள் புறப்படுகிற சமயத்தில் கான்வென்டில் இருந்து நளினா உற்சாகத்தோடு வந்தாள். "எப்போ பாட்டி வந்தீங்க?" என்று கேட்டபடி, பாட்டியம்மாளின் நாற்காலியில் செல்லமாகச் சாய்ந்தாள்: விமலாவக்கு உடம்பெல்லாம் எரிந்தது. ஒரு நாள் கூட, பெற்ற தாயான அவளிடம் நளினா இவ்வளவு அன்போடு நடந்தது கிடையாது. திருட்டுக் கழுதை 'பாட்டி நீங்க எப்போ வந்தாலும் ஒன்னும் வாங்கிட்டு வர்றது கிடையாது, புரசைவாக்கம் மாமா வரும்போதெல்லாம் பாக்கெட் பாக்கெட்டாய்ச் சாக்லெட் வாங்கி வருவாரு." நளினாவின் விமரிசனம் கேட்டு அத்தை திடுக்கிட்டாள். அவள், ஒரு நாள் கூட நளினாவுக்கு எதுவும் வாங்கி வந்தது இல்லை என்பது உண்மை. அந்த உண்மை அவளைச் சட்டது. என்ன