பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 143 பதில் சொல்வது என்று தெரியாமலே, நீயாவது சமாளியேன் என்று கெஞ்சுவது போல் ரேணுகாவைப் பார்த்தாள். நளினா இப்படி அடாவடித்தனமாகப் பேசுவதைக் கேட்ட விமலா, "திருட்டுக் கழுதை எவ்வளவு தின்னாலும் திருப்தி யில்லாத ஜென்மம். இதுக்கு வயிறே நிரம்பாது, எப்போ புத்தி வரப் போவுதோ?" என்று கடுகடுத்தபடி மகளைத் தன் பக்கம் இழுத்தாள். "பெரியவர்களைப் பார்த்து இனிமேல் அப்படிப் பேசமாட்டியே, மாட்டியே' என்று 'பளார் பளார்' என அறைந்துவிட்டாள். 'அத்தையும் ஒருநாள் கூட எதுவும் வாங்கிக்கிட்டு வரல்லியே’ என்ற குற்ற உணர்வில் தவித்ததாலோ அல்லது 'வாயாடிப் பெண்ணுக்கு, இன்னும் வேணும்' என்று நினைத்ததாலோ, விமலா அடிப்பதைக் கண்டு கொள்ளவில்லை. அதுவரை அம்மாள் ஒன்றும் பேசாமல் இருந்த ரேணுகா, "என்ன அண்ணி, அவள் குழந்தைதானே?" என்று இரக்கம் மேலிட அண்ணியின் கைக்குள் கசங்கியும், நகங்கியும் இருந்த நளினாவின் முடியை, சிரமப்பட்டுச் சிக்கெடுத்தபடியே விடுவித்தாள். நளினா விடவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கினாள். உள்ளங்கை இரண்டையும் பின் கழுத்தில் வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்தாள். அம்மா அடித்ததற்கான வெளிப்பாடு எதையும் காட்டிக் கொள்ளாமல், ஹாலைவிட்டு உள்ளறைக்குப் போய்விட்டாள். அத்தை பிராயச்சித்தம் செய்யத் தீர்மானித்தாள் "ரேணு, நாளைக்கு ஒன் பிரண்டோட பிறந்தநாள் விசேஷத்துக்கு நளினாவையும் கூட்டிக் கிட்டுப் போயேன்." "நல்ல ஐடியா அண்ணி, நாளைக்குச் சாயந்திரம் நளினாவுக்கு டிக்கா டிரஸ் செய்து வையுங்க நான் ஆறு மணிக்குள்ளே வந்துடறேன்" என்றாள் ரேணுகா விமலாவின் மெளனம் சம்மதம் கூறியது. அத்தையும் ரேணுகாவும் போய்விட்டார்கள்: நளினா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள். விமலா மகளைப் பார்த்துக் கொண்டே நின்றாள். கேள்வித்தாளில் இருப்பதை அப்படியே எழுதிவைத்துவிட்டு இதனால் இன்னும் இரண்டாவது வகுப்பிலேயே முடங்கிக் கிடக்கும் மகளின் எதிர்காலத்தை நினைத்த போது, அவளால் பயப்படாமல் இருக்க முடியவில்லை. மீண்டும் ஹாலுக்கு வந்து கணவன் படத்துக்கு ஓர் ஊதுபத்தியைக் கொளுத்திவிட்டுக் கண்ணிர்