பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 குற்றம் பார்க்கில் விட்டாள். படத்திற்குக் கீழே உட்கார்ந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். மற்றவர்கள், விழிப்பதற்காகத் தூங்குவார்கள். அவளோ துங்குவதற்காக விழிப்பவள். மறுநாள் மாலை ஆறு மணிக்கு முன்னதாகவே ரேனுகா வந்து விட்டாள். "அண்ணி பேபி ரெடியா?" என்று அவள் வந்ததும் வராததுமாகக் கேட்டபோது, நீளினா துள்ளிக் குதித்து அவள் கையைப் பிடித்தாள். விமலாவுக்குப் பயங்கரமான கோபம் "ஏண்டி பறக்கிறே? திருட்டுக் கழுதைக்கு ஊர் சுத்தணுமுன்னாக் கொண்டாட்டம்" என்று மகளை உற்றுப் பார்த்தாள். "ஏண்டி, இதுக்குள்ளே தலையில கட்டின ரிப்பனை எடுத்திட்டியா?" என்று குட்டினாள். ரேனுகாவுக்கு என்னவோ போலிருந்தது, ஊர் சுற்றவேணுமென்றால் கொண்டாட்டிம் என்று யாரைச் சொல்கிறாள்? அவள் சந்தேகம் வேறு ரூபத்தில் வெளியானது. "அண்ணி, உங்களுக்குக் குழந்தையை வளர்க்கவே தெரியலே. இப்படியா குட்டுறது?" "உனக்குக் கல்யாணம் நடந்து இந்தமாதிரி கோளாறு உள்ள குழந்தை பிறக்கட்டும். அப்புறந்தான். உன் குட்டுத் தெரியும்." "ஊரு உலகத்திலே பிள்ளை பெத்தவங்க இல்ல: நீங்க மட்டுந்தானா?" ரேணுகாவின் குத்தலான கேள்வி விமலாவின் நெஞ்சைக் குடைந்தது. அவள் குமுறினாள். "இருக்காங்க, கணவன்மாரோடு இருக்காங்க. இந்தத் தடிக்கழுதையை இன்னும் பத்து வருஷத்துலே ஒருத்தன் கையிலே பிடிச்சுச் கொடுக்கணும். இப்படி விவரமில்லாம இருந்தா எப்படி நடக்குமோ?" f "அண்ணி எனக்குத் தெரிஞ்ச சைக்கியாட்ரிஸ்ட், அது தான் மனநல டாக்டர் இருக்காரு. நளினாவைக் காட்டுவோமா? மனோதத்துவ மருத்துவம் பார்ப்பது நல்லது அண்ணி" "என் பொண்ணுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" "பைத்தியக்காரங்கதான் மனோதத்துவ நிபுணரிடம்