பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 145 போகணுன்னு அர்த்தமில்ல. யார் வேணுமுன்னாலும் போகலாம்." "வேண்டாம்மா, ஊரே சிரிக்கும்." "படிச்சிருந்தும் இப்படிப் பேசுறீங்களே மனநோய், தலைவலி, வயிற்று வலி மாதிரி நம்மை அறியாமலே வருகிற நோய். மேதைகளுக்கெல்லாம் வரும்போது நாமெல்லாம் எந்த மூலை?" "ஏதேது, இன்னும் கொஞ்ச நேரத்திலே எனக்குக்கூட மனநோய் இருக்குன்னு சொல்லுவே போலிருக்கே இந்த சைக்கியாட்ரிஸ்ட் வம்பே வேண்டாம், பைத்தியம் பிடித்து முத்தட்டும், அப்புறம் பார்க்கலாம் " விமலா சொல்லிவிட்டுச் சிரித்தாள். ரேணுகா சிரிக்கவில்லை. மனசுக்கு யோசனை கேட்கணுங்கறதைக் கேட்டுச் சிரிக்கிறதே ஒருவித மனநோய்தான். விமலாவுக்கு ஒரு சந்தேகம், ஒருவேளை தனக்கும் மனநோய் இருந்து அதனால்தான் சைக்கியாட்ரிஸ்ட்டிடம் போகத் தயங்குகிறாளோ? தனக்கு மனநோய் இல்லை என்று நிரூபிப்பவள் போல் "சரியம்மா, உன்பாடு நளினாபாடு. எப்படியோ போங்க" என்று சொல்லிவிட்டு ஜாக்கிரதையாகச் சிரித்தாள் ரேணுகாவும், நளினாவும் பிறந்த நாள் விழாவுக்குப் போய்விட்டார்கள். தன் மகள் மூளைக்கோளாறு உள்ளவள் மாதிரி நடந்து கொள்கிறாளோ என்ற வேதனையில், விமலா கணவன் படத்திற்கு எதிரில் நின்று அதுவரை அடக்கியிருந்த அழுகையை விடுவித்தாள். ரேணுகா விமலாவையும் நளினாவையும் சைக்கி யாட்ரிஸ்டிடம் கூட்டிக் கொண்டு போனாள். மனநல டாக்டர் என்றால் கிழவராக இருப்பார் என்று கற்பனை செய்திருந்த விமலாவுக்கு முப்பது வயது இளைஞரைப் பார்த்ததும் வந்திருக்க வேண்டாம்' என்பது போல் தோன்றியது. ரேணுகா சைக்கியாட்ரிஸ்ட்டைப் பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு, "நான் சொன்னது இவர்களைத் தான். பாவம் அண்ணி அண்ணா பத்து வருஷத்துக்கு முன்னாலே யுத்தத்திலே இறந்துட்டாரு. அண்ணிக்கு அண்ணாமேல் உயிரு. எப்படித்தான் நாளைக் கழிக்கிறாளோ? போதாக் குறைக்கு இந்தப் பொண்ணு மைண்ட் சரியில்லே" என்றாள்.