பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 குற்றம் பார்க்கில் பிறத்தியார் முன்னிலையில் அதுவும் ஒரு மனநல வைத்தியரிடம் பேசவேண்டிய அளவுக்குத் தன் நிலைமை வந்து விட்டதே என்ற எண்ணமே மனத்தை வாட்ட, விமலா பொங்கி வந்த கண்ணிரை விழிகளிலேயே தேக்கி வைத்தாள். சைக்கியாட்ரிஸ்ட் அறை விசாலமாக இருந்தது. ஓர் ஒரத்தில் ரப்பர் மெத்தை தாங்கிய கட்டில் அதற்கு எதிரே சிறிய வட்டங்களை உள்ளடக்கிய பெரிய வட்டம் வரையப்பட்ட ஒரு போர்டு. பலவித வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், தூய வெண்மையான ஒருவித வேற்றுமைக்கு ஒற்றுமை கூட்டியது. விமலாவும், ரேனுகாவும் அந்த அறையைச் சுற்றிக் கண்களைச் சுழலவிட்டபோது நளினா கட்டிலருகே சென்று அதன்மேல் கையை வைத்துக் குத்தினாள். விமலாவுக்கு எரிச்சலுக்குமேல் எரிச்சல்,"சனியனே! இங்கே வந்து உட்காருடி. தரித்திரத்துக்கு உடம்புதான் மிச்சம். மூளை கொஞ்சங்கூட இல்லை" என்று கடுகடுத்தாள். டாக்டரின் அறையைத் தன் வீடாக நினைத்து தன்னை மறந்து சொன்னதற்கு வருந்தித் தலை குனிந்தாள். இந்தத் தலைக் குனிவுக்குத் தன் மகள் தானே காரணம் என்று நினைத்தாள். நளினாவைப் பார்த்து முறைத்துக் கொண்டே நாக்கைக் கடித்துக் கொண்டாள். நளினா திரு திருவென்று விழிக்க, சைக்கியாட்ரிஸ்ட் உதட்டைக் கடித்தார். "ரேணு நான் இவர்களிடம் தனியாய்ப் பேசணும்" என்று அவர் சொன்னதும் நாகுக்காக ரேணு அறையை விட்டு நகரத் தொடங்கினாள். நளினாவையும் அழைத்துக் கொண்டு போகும்படி அவர் சைகை செய்தார். விசாலமான அறையில் முன்பின் அறியாத இளைஞருடன் தனித்து விடப்பட்ட விமலா தவித்தாள். அதைப் புரிந்து கொண்ட சைக்கியாட்ரிஸ்ட் "தயவு செய்து என் கேள்விகளுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் பதில் சொல்லுங்கம்மா டாக்டரிடம் உடம்பு முழுவதையும் காட்ட வெட்கப்படக் கூடாது. அது போல் ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் உள்ளத்தையும் திறந்து காட்டுறதில் தப்பில்லை" என்றார். விமலா அவரை ஆச்சரியத்தோடும், ஓரளவு எரிச் சலோடும் பார்த்தாள். சைக் கியாட் ரிஸ்ட் இளைஞர் சோதனையைத் தொடங்கினார், "உங்கள் கல்யாணம் காதல் கல்யாணமா?" "காதலுன்னும் சொல்ல முடியாது, இல்லேன்னும் சொல்ல