பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 147 முடியாது " "அதாவது ஒருவரை ஒருவர் மானசீகமாக நேசிச் சிங்க: பெற்றவர்கள் புரிஞ்சிக்கிட்டுக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அல்லது உங்க இருவருக்கும் திருமணம் நடக்கும் என்ற எண்ணமே உங்களுக்கிடையே ஒருவித அன்பை ஏற்படுத்தியது இல்லை?" விமலாவுக்கு அந்த இளைஞன் மீது நம்பிக்கை பிறந்தது. "ஆமாம்" என்று தலையை ஆட்டினாள். "ஓங்க புருஷர் எப்போதாவது உங்களிடம் கோபமாய் நடந்திருக்கிறாரா?" "ஒருநாள் கூடக் கிடையாது." "தாம்பத்திய வாழ்க்கையில்?..." "குறை கூற இடமில்லை." "ஐ n அவரு எதுக்காக ராணுவத்தில் சேர்ந்தாரு?" "அவருக்கு வேலை கிடைக்குமுன்னாலேயே திருமணம் ஆயிட்டுது அதுவரைக்கும் அவருக்குப் பாக்கெட்மணி' கொடுத்த பெற்றோர்கள் கொஞ்சம் அலட்சியமாக நடந்துகிட்டாங்க. என்னையும் மதிப்புக் குறைவா எண்ணினாங்க. எப்படியாவது ஒரு வேலையில் சேர்ந்திடணுமுன்னு அவரு பல ஆபீஸ்களுக்கு நடந்தாரு, ஆனால்..." "கிடைக்கலே. எமர்ஜென்ஸி ரெக்ரூட்மெண்ட் வந்ததும் சேர்ந்துட்டாரு." "கரெக்ட்." "அவரு ராணுவத்திலே சேரும்போது உங்களுக்கு திருமணமாகி எத்தனை மாதம்? குழந்தை பிறந்திருந்ததா?" "ஒண்ணே கால் வருஷம், நான் எட்டு மாதக் கர்ப்பம்." "அவரை ராணுவத்தில் சேர வேண்டாமுன்னு நீங்க தடுக்கலியா?" வினாவை எழுப்பிய டாக்டர் விமலாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். "எவ்வளவோ சொன்னேன் வழக்கத்துக்கு விரோதமாய்