பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 149 சாதாரணமாய்த்தான் இருக்கிறாள்." "cm}T帝 ?" "எஸ் மேடம். கணவர்மேலே உங்க மனத்தின் அடித்தளத்திலே இருந்த கோபம், கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பாகி, தங்கிட்டு, நளினாவைப் பார்க்கும் போதெல்லாம் மனைவியை அநாதையாய் விட்டுட்டுப் போனவருடைய மகள் தானேன்னு உங்களை அறியாமலே, வெறுக்கிறீங்க. இந்த வெறுப்பை, உங்கள் வெளி மனமும் இயல்பான தாய்மையும் அங்கீகரிக்கத் தயாராய் இல்லே. அதனால் அடிமனத்தில் குழந்தையைத் திருத்தணுங்கற பாசாங்கு உணர்வாக வெளிவருது. இது நின்றால் நளினா சீராக வளர முடியும்." "அப்படின்னா நான் குழந்தையை வெறுக்கிறேன் என்கிறீர்களா?" "நிச்சயமாக, ஆனால் வேணுமுன்னு வெறுக்கலே, அடி மன உணர்வ. சந்தர்ப்பக் கோளாறால் வந்துட்டுது இதனால், எந்தச் சராசரி சின்னப் பொண்ணும் செய்யக்கூடிய காரியங்களை நளினா செய்ததும் உங்க வெறுப்பு குற்றம் கண்டு பிடிக்கும் போலீசாகவும், அவற்றைத் தண்டிக்கும் நீதிபதியாகவும் போலி உருவங்களோடு வெளி வருகிறது."

விமலா கையைப் பிசைந்தாள் "வருத்தப்படாதீங்க. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எந்தப் பொண்ணும் உங்களை மாதிரியே நடந்துக்குவாள். ஆனால், ஒன்று. உங்கள் கணவர், தம் சுயமரியாதையைவிட, 'உங்க சுயமரியாதையைப் பெரிசா நினைத்திருக்காரு பெற்றோர்கள் உங்களை இன்சல்ட்' செய்தவுடன், அவர் தாம் உழைக்கிற பணத்தில்தான் நீங்க சாப்பிடணுமுன்னு ஆசைப்பட்டிருக்காரு. சுகபோகமாய் வாழ்ந்த அவர், ராணுவத்தில் சேரக் காரணமே அவர் உங்கள் மீது வைத்திருந்த அன்புதான்" "இப்போ புரியுது லார் நான்தான் புரிஞ்சுக்காத பாவியாய் இருந்திட்டேன் " "கழிவிரக்கம் தேவையில்லை. அந்த உணர்வே வேண்டாம். அபாயமானது இந்த மாதிரி அசாதாரண நிலைமை வருவது