பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 குற்றம் பார்க்கில் சகஜந்தான் உங்கள் கணவர், உங்களுக்காகவே உயிர் விட்டதை நினைச்சுப் பாருங்க! உங்களிடம் எப்படியெல்லாம் அன்பைக் கொட்டி நடந்து கொண்டார் என்பதைச் சிந்தியுங்கள் துங்கப் போகும் போதெல்லாம் என் கணவர் என் மீது வைத்திருந்த பாசத்தாலேயே ராணுவத்தில் சேர்ந்தார் என்று திரும்பத் திரும்ப மனத்தில் சொல்லிக் கொள்ளுங்கள் இந்தச் சுயசிந்தனை அடி மனத்தில் இருக்கிற வெறுப்பை நீக்கிடும் அப்படியும் உங்க பெர்ண்ணு திருந்தாவிட்டால் என்னிடம் வாங்க மெஸ்மெரிக் டிரீட்மெண்ட் கொடுக்கிறேன் அந்த வசீகரமான முறை மருத்துவத்தில் குழந்தை திருந்திடுவாள் " "மிக்க நன்றி லார் " "குழந்தை திருந்திடுவாள்" என்ற அந்த இளைஞன் தனது குறையை நாகுக்காகச் சொன்னவிதம், விமலாவைப் பெரிதும் கவர்ந்தது. லேசாகச் சிரித்துக் கொண்டே பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியேறினாள்." விமலா மீண்டும் சைக்கியாட்ரிஸ்ட்டிடம் வரவுமில்லை இப்போது நளினா மலங்க மலங்க விழிக்கவும் இல்லை