பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 ஒரு சந்தேகத்தின் நன்மை காற்றில் சாய்ந்த வாழையைப் போல, அவள் சாய்ந்து கிடந்தாள். வகிடெடுத்த தலைமுடி, கைகளில் உடைந்து போன வளையல்கள். எந்தவிதக் கோரமும் இல்லை அலங்கோலம் இல்லாமல் அசந்து தூங்கியவள் போல் மீனாட்சியின் உடல் கிடந்தது. வழக்கப்படி ஒப்பாரி வைக்கும் கிழவிகள் கூட, வழக்கத்துக்குப் புறம்பான அந்தச் சாலைக் கண்டு அஞ்சியவர்கள் போல், மூலையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்கள். மீனாட்சியின் அம்மா மட்டும் "அட, கடவுளே! என்னைக் கொண்டுக்கிட்டு போயிருக்கக் கூடாதா? என் மவதானா கிடைச்சா?" என்று புலம்பிக் கொண்டிருந்தாள். ஒரே ஒரு பெண் மட்டும் மீனாட்சியின் காதோடு உரசிக் கொண்டிருந்த காலி டம்ளரை எடுத்து வைத்துக் கொண்டு, "கொலைகாரப் பாவிப்பய மவனே, நீ விளங்குவியாடா? உன் அக்கா தங்கச்சிக்கும் இந்த மாதிரி வராதா?" என்று கேவிக் கேவி அழுதாள் வீட்டிற்கு வெளியே, ஆண்கள் திரண்டு நின்றார்கள். சிலர் வாதமடக்கி மரத்திலிருந்து பத்துப் பதினைந்து கம்புகளைச் செதுக்கி, குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு, மீனாட்சியின் கடைசிப் பயணத்துக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள் ஆம்பிள்ளைகள் கூட்டத்தில் அச்சந்தரும் நிசப்த்ம், எப்படி அவள் இறந்திருப்பாள் என்பதை, மீனாட்சியின் அண்ணன் உதிரமாடன் சொன்னதில் இருந்து, அவர்கள் புரிந்து கொண்டார்கள். என்றாலும், ஒவ்வொருவருக்கும் தெரிந்த அந்த ரகசியத்தை, அவர்களால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. உதிரமாடன் மாட்டுத் தொழுவத்தில் கல்தூணில் தலையைச் சாய்த்துக் கொண்டு பித்துப் பிடித்தவின் போல் கிடந்தான். வெளியூர்க்கார சொந்தக்காரர் ஐயாசாமி, துஷ்டி கேட்பதற்காக வந்தார்.