பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 குற்றம் பார்க்கில் "நேத்து தாய, வயக்காட்டில் பார்த்தேன். அடிச்சி கொன்னாக்கூட ஆறு மாசம் ஆகும். எப்படி இறந்துட்டா?" என்றார் ஐயாசாமி. கூட்டத்தில் ஒருவர் பதிலளித்தார். "மீனாட்சி, மூணு மாசமா இங்க இருக்காதது உமக்குத் தெரியுமல்லா...?" "தெரியும். நான் தான் அவ புருஷனை முந்தா நாளுப் பாத்து சத்தம் போட்டேன். அப்பன் பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆடாதல: நகைப் பாக்கியை உதிரமாடன் போடாம போகமாட்டான்'னு புத்திமதி சொன்னேன். நாளைக்குப் போயி மீனாட்சிய கூட்டிக்கிட்டு வரப்போறேன், மாமா'ன்னு எங்கிட்ட அவன் சொன்னானே." "அந்த அநியாயத்தை ஏன் கேக்கிறீரு? அவ புருஷன் நேத்து ராத்திரி வந்தான். ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்காங்க. காலையில் ஒண்ணா காபி சாப்பிட்டிருக்காங்க. அவா காபி சாப்பிட்டவுடனே, அந்தப் பய பக்கத்து ஊருக்குப் போயிட்டு வந்துடுறேன், தயாராய் இரு'ன்னு சொல்லிட்டுப் போயிருக்கான். அரை மணி நேரத்துல செத்துட்டா. காபி டம்ளரை முகந்து பாத்தா, ஒரே வாடையாய் இருக்கு." "நீர் சொல்றதைப் பார்த்தா..." "சொல்றதைச் சொல்லிப்புட்டேன். புரிஞ்சிக்கிடும்." "வே, அந்தப் பய. அப்பன் பேச்சைக் கேட்டு, அட்டியல் போடணும்னு சொல்லி, அவள இங்க விட்டுட்டுப் போறது எல்லாப் பயலுஞ் செய்யறதுதான். அதுக்காகக் கட்டின பெண்டாட்டிய கொல்லுவானா?" "ஏன் மாட்டான்? அய்யா அட்டியல் கேக்குறார்னு சொல்லி இங்க அவளை விட்டது. கம்மா ஒரு சாக்கு வேணுமுன்னு அந்தக் கிழவன சந்தியில இழுக்கிறான். அந்தப் பயலுக்கு நம்ம மீனாட்சி பிடிக்கலையாம்." "ஏனாம்?" "அந்தப் பய ஒரு சினிமாவை ஒன்பது தடவ பாப்பான்னு