பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 153 ஒமக்குத் தெரியும். மீனாட்சி சினிமாக்காரிங்க மாதிரி ஸ்டைலா இல்லியாம். 'முன் கொசுவம்' வச் சிக் கட்டிக்க மாட்டேனுட்டாளாம். இப்போ பட்டினத்துல இருக்கிறவங்க போடுறதுகளே, பிராவோ, பருந்தோ அதை வாங்கிக் கொடுத்தானாம். அவள் அதைத் தூக்கி எறிஞ்சுட்டாளாம். அன்னைக்கே அந்தப் பொண்ண அடி அடின்னு அடிச்சு இங்க கொண்டு வந்து விட்டுட்டான். கம்மா வெளில மெய்க்கிறதுக்கு நகைப் பாக்கின்னு சொல்லுதான்." "நீரு என்னதான் சொல்லும்.நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடக் கூடாது. விஷங்குடுத்து கொன்னுருப்பான்னு உடனே சொல்றது தப்பு." "நீரு ஒண்னு ஆவுடையானுர்ல, சவுடையாங்குட்டம் வகையறாவுல போயி, இந்தப் பய, ஒரு பொண்ண கட்டிக் குடுக்கும்படி கேட்டிருக்கான். அதுக்கு அவங்க, 'ஒன் பெண்டாட்டி செத்தா போயிட்டா. எங்க பொன்ன குடுக்கிறதுக்குன்னு சொல்லி இருக்காங்க." "அதனால ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, மீனாட்சியை கொன்னுட்டான்னு சொல்றீரா? நீரு சொல்றபடி நடந்திருக்கலாம். ஆனால், இப்பவும் சொல்றேன். கண்ணால பாக்குதும் பொய்யி: காதால கேக்குதும் பொய்யி: தீர விசாரிக்கதே மெய்யி. விசாரிக்காம, நீங்க பாட்டுக்குப் பேசாதீங்க." கல்தூணில் சாய்ந்து கொண்டிருந்த உதிரமாடன், சட்டென்று எழுந்து வீட்டுக்குள் போனான். இடங்கொள்ளாமல் இருந்த கூட்டத்திற்குள் இருந்து, அவன் தங்கையான பத்து வயதுச் சிறுமியை, பரபரவென்று இழுத்துக் கொண்டு வந்து கூட்டத்திற்கு மத்தியில் நிறுத்தினான். "தாத்தா, நீங்களே...இவள விசாரியுங்கோ" என்றான். - ஐயாசாமி விசாரணையைத் துவக்கினார்: "ஏய். லச்சுமி, நடந்ததை நடந்தபடியாகச் சொல்லனும். நேத்து ஒன் அத்தான் எப்போ வந்தான்? சொல்லும்மா...அழாமச் சொல்லு." - "ராத்திரி எட்டு மணிக்கு." (5.ur. 11.