பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 குற்றம்'.பார்க்கில் "அக்கா என்ன சொன்னா? "அத்தானப் பாத்து இப்பதான் கண்ணு தெரிஞ்சதான்னு சொல்லிட்டு, சுவர்ல தலையை வச்சி அழுதாள். "அப்போ. வீட்ல யாரும் இருந்தாங்களா?" "நான் மட்டும்தான் இருந்தேன்." "சரி, அக்கா அழுதிச் சில... ஒன் அத்தான் என்ன பண்ணுனான்?" "அக்காவோட தோளப் போயி பிடுச்சி அவரு பக்கமாகத் திருப்பினாரு அப்புறம்...அப்புறம். அக்கா முகத்துல. அப்புறம்..." "சரி போதும் நீ அப்போ என்ன பண்ணுனே?" "எங்க அக்கா, ராமசாமி மாமா சந்தைக்குப் போயிட்டு வந்திருக்காரான்னு பாத்துட்டு வான்னு' என்கிட்ட சொன்னா. அத்தான் பத்துப் பைசா குடுத்தாரு நான் வெளில போயிட்டேன்." "அப்புறம் நீ ராத்திரி சீக்கிரமா தூங்கிட்டியா?" "இல்ல." "ஏன்?" "அத்தானும் அக்காவும் போட்ட சிரிப்புல என்னாலே தூங்க முடியலே." "சரி, காலைலே அவங்க காபி சாப்பிடும்போது பாத்தியா?" "நான் தான், கொண்டு போயி குடுத்தேன் அத்தான் 'நீ போ புள்ளே'ன்னு என்ன துரத்தினாரு." "நீ போயிட்டியோ?" "இல்ல. "ஏன் ?" தயங்குகிறாள். "சொல்லுழா, வாய்க்குள்ளே கொழக்கட்டையா வச்சிருக்க?" "நான் வெளியே போற மாதிரி போயி கதவு இடுக்குலே