பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 155 நின்னேன்." "எதுக்கு?" "சும்மா." "தோல உறிச்சுப்படுவேன். எதுக்குக் கதவு இடுக்கிலே நின்ன?" - "அத்தான் அக்காள என்ன பண்ணுறார்னு பாக்கறத்துக்காக. ராமசாமி மாமா மவன் பாத்துட்டு வரச் சொன்னான். பத்துப் பைசா குடுக்கிறதாயும் சொன்னான்." "அத்தான் என்ன பண்ணுனான்?" "அக்காவோட வாயில் காபி டம்ளரை வச்சாரு. உடனே அக்கா அதை எடுத்து அத்தான் வாயில் வச்சா..." சிறுமி சொல்ல முடியாமல் நிறுத்தினாள்." "அத்தான் குடிச்சானா?" 'குடிக்கலே: அக்காளயே குடிக்கச் சொல்லிட்டு, அவள் கழுத்துல..." - - - "சரி, போவட்டும், காபி குடிக்கும்போது, அக்கா ஏதாவது. சொன்னாளா?" கடைசி முடுக்க கசக்குதுன்னு சொல்லித் துப்புனா. "அத்தான் அப்போ என்ன பண்ணுனான்?" "துள்ல்ட எடுத்து. அக்கா வாயைத் துடைச் சாரு." "அப்புறம்..." r "உடனே புறப்பட்டாரு. அக்கா அழுதாள். அதுக்கு அவரு, 'நான் ஏமாத்த மாட்டேன். பக்கத்து ஊருக்குத் தான் போறேன். இன்னும் அரை மணிலே வந்திடுவேன். இன்னைக்கு முன்கொகவம் வச்சி கட்டியிருக்கது மாதிரி இருக்கணும். பிடிக்கலன்னு சேலய அவுத்தியானா? நான் வந்து முன்கொகவம் வச்சி கட்டுவேன்'னு சொல்லிட்டு வெளில வந்தாரு. அக்காளும் வெளில வந்தாள்." "போகும்போது எதுவும் சொன்னானா?"