பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 குற்றம் பார்க்கில் "ஏன் ஒரு மாதிரி இருக்க? எதுவும் பண்ணுதான்னு கேட்டாரு. அக்கா, லேசா தலை வலிக்குது'ன்னு சொன்னா. பேசாமப் படு...நான் வந்துடுறேன்’னு சொல்லிட்டுப் போனாரு. "வேற எதுவும் சொன்னானா?" "இல்லே." "அவன் போகையில், திரும்பித் திரும்பிப் பார்த்தானா?" "ஆமாம் பாதித் தூரம் போனவரு, திரும்பி வந்து, 'உடம்புக்கு ஒண்னுஞ் செய்யலியே'ன்னு கேட்டாரு. அதுக்கு அக்காள். ஒண்னுமில்ல. நீங்க வரமாட்டியான்னு பயமா இருக்கு. நான் முன்கொசுவத்தை அவுக்கல. நீங்க சொல்றது மாதிரி பவுடர் வேணுமுன்னாலும் பூசிக்கிடுறேன். சீக்கிரமா வந்துடுங்க'ன்னு சொன்னாள்." "அப்புறம் என்ன நடந்தது?" "கால்மணி நேரத்தில் அக்கா வாந்தி எடுக்கறது மாதிரி வாயப் பண்ணுனா. அப்புறம் கட்டுல்ல போயி, படுத்தாள். கையி, காலை வெட்டுனா. அம்மா வந்து, 'என்னம்மா பண்ணுதுன்னு கேட்டா. அக்கா. அந்த தம்ளரையே பாத்தா அப்புறம் அதை எடுத்து சீலய வச்சி நல்லா துடைச்சா எண்னக் கூப்பிட்டு, அத்தான் வாறாராண்னு பாக்கும்படி சைகை காட்டினாள். நான் வெளில வந்தேன் அதுக்குள்ளே அம்மாவும் அர்ைணாச்சியும் சத்தம் போட்டு அழுதாங்க " ஐயாசாமி தாத்தா, தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அதைப் பார்த்த கூட்டத்தில், ஒரு பரபரப்பு ஏற்பட்டது "பழி வாங்காம விடக்கூடாது. அந்தப் பய இங்க வரத்தான் செய்யுவான். அவனையும் வெட்டி, அவளோடயே புதைக்கனும்." ஐயாசாமி ஏதோ பேச வாயெடுத்தார் அதற்குள், கூட்டத்தில் ஒரு கொந்தளிப்பு. உதிரமாடன், ஆவேசம் வந்தவன் போல் வீட்டுக்குள் ஓடினான் பாளை அரிவாள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான். இதற்குள் அவனின் முதல் பங்காளிகள் ஆளுக்கொரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டார்கள். எல்லாரும் மீனாட்சியின் கணவன் வருகைக்காகக் காத்து நின்றார்கள். ஒருவர், "ஏல. நம்ம கிட்ட ஆயுதம் இருக்கறதைப் பாத்துட்டாமுன்னா அந்தப் பய ஒடிப்