பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 157 போயிடுவான். மறைச்சு வச்சிப்புட்டு பேசாம இங்க வந்து உக்காருங்க. அவன இன்னைக்கி தீட்டித் தள்ளிடனும்" என்றார். எங்கும், மயான அமைதி உதிரமாடன், சுமாரான வசதியுடையவன் அவன் அய்யா, அவனுக்குப் பதினைந்து வயசிருக்கும்போதே போய்விட்டார். பள்ளிக்குப் போவதை நிறுத்திவிட்டு வயல் வேலையில் அவன் இறங்கினான். பலர், பெண் கொடுக்க முன்வந்தார்கள். அவன் மறுத்துவிட்டான். தங்கை மீனாட்சியை நாத்தினாக்காரி' கொடுமைக்குள் ஆழ்த்த அவன் விரும்பவில்லை. அவள் மீது உயிரையே வைத்திருந்தான். கொஞ்சம் முன்கோபக்காரன். ஒரு தடவை, பக்கத்துத் தெருக்காரர் ஒருவர் கையில் இருந்த அவத்திக் கீரையைப் பார்த்து விட்டு, அது தன் தோட்டத்துக் கீரையாகத்தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்துடன் தெரு வழியாகப் போனவரின் துண்டைப் பிடித்து இழுத்துக் கொண்டே, "உள்ளதச் சொல்லாட்டா முப்பத்திரண்டு பல்லையும் தட்டிடுவேன். எங்க தோட்டத்துல தான பறிச்சே?"என்று அதட்ட, அதற்கு அந்த அவுத்திக்கீரை, "டேய், நான் பறிச்சதப் பாத்தியா?" என்று கெஞ்சங் குரலில் கேட்க, அடிக்கப் போன உதிரமாடன் கையை வந்து பிடித்தாள் மீனாட்சி "அண்ணாச்சி அவரு பறிச்சத நீ கண்ணால பார்க்கல. அவரு வேற தோட்டத்துலகூட பறிச்சிருக்கலாம். எதுவும் உறுதியா தெரியுறதுக்கு முன்ன, ஒருவர் மேல குத்தம் சுமத்தறது தப்பு. இந்த மாதிரி சமாசாரங்களைக் கடவுள் கிட்ட விட்டுடனும், அண்ணாச்சி" என்று சொன்னவுடனே, உதிரமாடன் பெட்டிப் பாம்பாகி, வீட்டுப் பெட்டிக்குள் அடங்கி விட்டான் அடிக்கடி தங்கையிடம், சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட ஆலோசனை கேட்கும் உதிரமாடன், அவள் திருமணத்தை ஓர் உயிர்ப், பிரச்சினைக்குரிய பெரிய விஷயமாக நினைத்து, பக்கத்து ஊரிலேயே பணக்காரரான ஒரு வீட்டின் ஒத்தைப் பிள்ளை'க்கு ஆறாயிரம் ரூபாய் சுருளோடு ஐம்பது கழஞ்சி நகையோடு கொடுத்தான். நான்கு வேளை சாப்பிட்டுவிட்டு. மூன்று வேளை சினிமாப் பார்க்கும் மீனாட்சியின் கணவன் மருதராசாவுக்கு, மனைவி பிடிக்கவில்லை. அவளை, அடிக்கடி அடித்தான். 'உன் அண்ணனை இன்னொரு செயினு போடச் சொல்லு'ன்னு சொல்லி அடிக்கடி