பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 குற்றம் பார்க்கில் பிறந்தகத்துக்கு அனுப்பி வந்தான். உதிரமாடன், மச்சான்காரன் கேட்பதை எல்லாம் கொடுத்தான். ஒரு தடவை கடைசியாக அவள் வந்தது 'அட்டியல் கேட்டு. - உதிரமாடனுக்கு அப்போது நல்ல விளைச்சல். அட்டியல் போட்டிருப்பான். ஆனால், மீனாட்சியை வைத்து வாழ விருப்பமில்லாமல்தான் அவன் இப்படி அடித்து அலைக்கழிப்பதாக உணர்ந்ததும், தங்கையை அழைத்து உண்மையா?' என்று கேட்டான். அவள் முதலில் மறுத்தாள். இறுதியில் கண்ணிர் விட்டாள். எனவே, நாலு பெரியவர்களை வைத்து விவகாரம் பேசி, கேட்பதை யெல்லாம் போட்டு, இனிமேல் அடிக்க மாட்டேன்' என்று மருதராசாவிடம் உறுதி வாங்கிக் கொண்டு, தங்கையை அனுப்பலாம் என்று நினைத்தான். அதற்குள் மீனாட்சியோ, அவனை விட்டுப் பிரிந்து விட்டாள். இப்படி. உதிரமாடன், பாளை அரிவாளை கூர் பார்த்துக் கொண்டான். துரத்தே இரண்டு தலைகள் தெரிந்தன. மருதராசாவும் இன்னொருவனும் ஓடிவந்து கொண்டிருந்தார்கள். மருதராசா. தலையில் அடித்துக் கொண்டே வர, அருகில் வந்தவன் அவனை அனைத்தபடியே வந்தான். "செருக்கி மவனுக்கு சினிமாப் பார்த்துப் பாத்து நடிப்பு வந்துட்டு. பொண்டாட்டியைக் கொன்னுப்புட்டு, நடிச்சிக்கிட்டு வாரான் பாரேன்!" < - "ஏல, சத்தம் போடாதீங்க. பூனை மாதிரி இருங்க. அவன் வந்ததும் புலி மாதிரிப் பாயனும். இங்கேயே பொலி போட்டுடனும். ஏல.தருமரு. இன்னொரு 'பாடை கட்டுடா!" மருதராசா நெருங்கிக் கொண்டிருந்தான். அனைவரும் அவனைத் தாக்குவதற்குத் தயாரானார்கள். ஐயாசாமி தாத்தாவால் பொறுக்க முடியவில்லை. "ஏய், சொல்லுறதைக் கேளுங்கடா அவன் குத்தம் செய்யாம இருந்தால், அந்தப் பாவம் நம்ம விடாது." "நீரு கம்மா கிடயும். அவன் போன அரைமணி நேரத்துல மீனாட்சி இறந்துட்டா; இதைவிட என்ன அத்தாட்சி வேனும்?" "மாரடைப்புலகூட அவள் செத்திருக்கலாம்." "அப்படியே வச்சிக்கிருவோம்; மீனாட்சி எதுக்கு டம்ளரைத் தொடைக்கனும்?" "புருஷன் ஆசையா வாயில வச்ச டம்ளர்னு அதை