பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமூத்திரம் 159 எடுத்திருக்கலாம்: அவன் மருந்து போட்டிருந்தா. மீனாட்சி ஏன் தங்கச்சிய, அத்தான் வாறாரான்னு வெளில நின்னு பாக்கச் சொல்லணும்? சொல்லுங்கடா." 'மீனாட்சி தங்கச்சி பேக்குப் பய மவு: গঙ্গ கிடக்க ஒண்னு சொல்லுவா" - - "நீங்க சொன்னதைத்தாண்ட நான் சொல்லுறேன். மீனாட்சிய்ோட தங்கச்சி பேக்குப் பய மவா, ஒண்னு கிடக்க ஒண்ணு சொல்லுவா." "அப்படின்னா இந்தப் பய, அவள கொல்லலன்னு சொல்றீரா?" - "நான் அப்படியும் சொல்லல. இப்படியும் சொல்லல. பொண்டாட்டியைக் கொல்லுதவன் காலையில வந்து எதையாவது போட்டுக் குடுத்துட்டுப் போவான். ராத்திரில் பொண்டாட்டிகிட்ட தூங்கிட்டு, க்ாலையில கொல்ல மாட்டான். அப்படிக் கொன்னுருந்தால் அவன் கையி காலு அழுவி சாவான். நாம ஒரு நாளையிலே காரியத்தை முடிச்சிக்கக் கூடாது. அது அவனுக்கு உபகாரம் பண்ணுவது மாதிரி..." - "தாத்தா நீரு பூசி மெழுகாதேயும். அவனைக் கண்டங் கண்டமா வெட்டாட்டா, நாங்க உடல வச்சிருக்கதுல அர்த்தமில்ல." உதிரமாடன், அரிவாளை எடுத்துக் கொண்டான். எல்லோரும் ஆயுதங்களைப் பிடித்துக் கொண்டார்கள். ஐயாசாமி தாத்தா, செய்வதறியாது திகைத்து நின்றார். - இதற்குள் மருதராசா, நெருங்கி விட்டான். கூட்டத்தினர், ஓர் ஆளைப் போல் எழுந்து போர்க்கோலத்துடன் நின்றனர். திடீரென்று, காட்சி மாறிற்று. உதிரமாடன், அரிவாளை ஓங்கிக் கொண்டு, ஆவேசம் வந்தது போல் கத்தினான். "என் உடன்பிறப்ப கொன்னுட்டு, நாக்கு மேல பல்லப் போட்டுக்கிட்டு வாlயா? வா.உன்ன, இன்னைக்கு கண்டதுண்டமா வெட்டிப் போடுறோமா இல்லியாண்னு பாரு" இப்புடிக் கத்திக் கொண்டே உதிரமாடன் ஆவேசம் வந்தவன் போல் மருதராசாவை நோக்கி ஓடினான். தலையில் அடித்துக் கொண்டே ஓடிவந்த மருதராசா, திடுக்கிட்டு நின்றான். அடுத்த கணம் நிலைமை புரிந்துவிட்டது. உயிர் காக்கும் முயற்சியாகத் திரும்பி, கூட்டத்தினர் பிடிக்க