பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 குற்றம்-பார்க்கில் முடியாத அளவிற்கு வேகத்துடன் ஓடினான். சற்று தூரம் துரத்திவிட்டு உதிரமாடன், சோர்ந்து போய் திரும்பி வந்து கல்தூணில் சாய்ந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணிர் பெருகி வழிந்தது. கூட்டத்தினர் அவனை எரிச்சலோடு பார்த்தார்கள். "இந்தப் பயலுக்கு எப்பவும் அவசரம். அப்போ அவனுக்கு கேக்குற நேரமுல்லாம், குடுத்துக் கெடுத்தான். இப்போ, அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துட்டான்." "அவசரப் பட்டுட்டியே பேசாம இருந்திருந்தா, அவன் தானா சிக்கி இருப்பான். கோழிக்குஞ்ச நசுக்குறது மாதிரி நசுக்கியிருக்கலாமே அறிவு கெட்ட பயலே " உதிரமாடன்ா, அறிவுகெட்ட பயல். அவன் தனக்குள்ளே துயரத்தோடு சிரித்துக் கொண்டான். ஐயாசாமி தாத்தா உபதேசம் செய்கையில், அவன் காதுகளில் மீனாட்சியின் குரல்-அவுத்திக்கீரை தகராறின் போது பேசிய பேச்சுக்கள் ஒலித்துத் தடுத்துவிட்டன. சட்டத்தில், 'பெனிபிட் ஆப் டவுட் குற்றவாளிக்குச் சேர வேண்டும் என்று இருப்பதையே அறியாத நிலையில் .ஆனால், அதற்கு மூலமாக விளங்கும் இயல்பான பகுத்தறிவால், மீனாட்சி சொன்ன அந்த வார்த்தைகள், மருதராசாவைக் கொல்லக்கூடாது என்று உடனே தீர்மானித்து விட்டான். ஆனால் இப்போது, தான் மட்டும் அவனைக் கொல்லக்கூடாது என்று சொன்னால், மற்றவர்கள் ஒத்துக்கொண்டு கேட்பார்களா? அவனையே அடித்துப் போட்டுவிட்டு, மருதராசாவை அக்குவேறு ஆணிவேறாக ஆக்கியிருப்பார்கள் ஆகையால், மருதராசாவுக்கு வரப்போகும் அபாயத்தை உணர்த்தி, அவனைத் தப்பிக்க வைக்கும் உபாயமாகத் தான் உதிரமாடன், முன்னதாகவே குரல் கொடுத்துக் கொண்டு அப்படி ஆவேசமாக ஓடினான் என்பது யாருக்குத் தெரியும்? திரும்பி வந்து தூணில் சாய்ந்து கொண்டு, கேவிக் கேவி அழுது கொண்டிருந்த உதிரமாடனின் செவிகளில் மீண்டும் மீனாட்சியின் குரல் கேட்டது. 'நீங்க செஞ்சது ரைட்டு அண்ணாச்சி எதுவுமே உறுதியா தெரியுறதுக்கு முன்ன, ஒருவரு மேல குத்தம் சுமத்துவது தப்பு. அதுக்காக அவங்க மேலே பாயறது அதைவிடத் தப்பு. இந்த மாதிரி சமாசாரங்களைக் கடவுள் கிட்ட விட்டுடனும் அண்ணாச்சி..' 'நான் அப்படித்தான் விட்டுட்டேன், . தங்கச்சி...' என்று கேவினான் உதிரமாடன்.