பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 போதும் உங்க உபகாரம் சென்னை நகரில், வீட்டு வசதி வாரியத்தின் மார்க்கெட் பகுதியான 'ப' வடிவில் அமைந்த அந்தக் கட்டிடத்தின் தாழ்வாரங்களில் பலர் படுத்துக் கிடந்தனர். இரவு மணி பன்னிரண்டு இருக்கும். 'பல்லவ'யுகம் முடிந்து. வஸ்தாதுகள் யுகம்' துவங்கிய சமயம். திடீர்க் கோடை மழை விட்டு விட்டு விளாசிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கடையின் முன்னாலும், பத்துப் பன்னிரண்டு உடல்கள், குளிராலும், மழைத் தூவானத்தாலும் வேட்டியை உறிந்து மூடிக்கொண்டும், புடவைகளை இழுத்துத் தலைகளைப் போர்த்திக் கொண்டும் கிடந்தன. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது போல் தோன்றினாலும், நிலைமை அப்படி அல்ல: இன்னின்னார் இந்திந்த இடத்தில்தான் ப்டுக்க வேண்டும் என்று ஒரு மரபு நிலைநாட்டப் பட்டிருந்தது. வரையப்படாத அந்த எல்லைக்கோட்டை மீறினால், நிலைமை வன்முறையாகும். அப்படிப் பல அடிதடிகளும் ஏற்பட்டிருக்கின்றன. வெளி ஆசாமி ஒருவன் அங்கே புக முடியாது. அப்படிப் புகுந்தால், வெளித் தேனீயை, ஒரு கூட்டின் தேனி.க்கள் மொத்தமாகத் தாக்குவது போல, புகும் ஆசாமியை பூந்து விளையாடி விடுவார்கள். இத்தகைய சாம்ராஜ்யத்தின் விசாலமான கடையின் முன்னால், நான்கு ஆசாமிகள் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். நால்வரில் ஒருவ்ன், எவரும் எளிதாக அடையாளம் காணக்கூடிய, கிருதா மீசை வாத்தியார்'. இருவர், சராசரியைவிட அதிக வலுவுள்ளவர்கள். ஒருவன் நோஞ்சான் பையன். அவர்கள் உட்கார்ந்திருந்த தோரணையையும், அவர்கள் ராஜ்யத்தின் விசாலத்தையும் பார்த்தாலே, ஆசாமிகள் 'கில் லாடிகள்' என்பதைப் புரிந்து கொள்ளலாம். படுக்கிறவர்களிடையே 'மாமூல் வாங்குபவர்கள் போல் தோன்றியது. மழை விட்டிருக்கிறதா என்பதை அறிவதற்காக, கையை வெளியே நீட்டிய நோஞ்சான், "ஏதோ ரெண்டு சாவுக் கிராக்கிங்க