பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 குற்றம் பார்க்கில் தெரியுது. ஒண்ணு கைல ஒரு பாய் கீது. இங்க, இடம் பிடிக்க வர்றாப்போல தோணுது" என்றான். "கஸ்மாலங்க, இடம் பிடிக்கத்தான் வர்துங்க." என்றான் டெப்டி-வாத்தியார். "வர்ட்டும், வர்ட்டும், சாத்திப் பூடலாம்" என்றான் அஸிஸ்டெண்ட் வாத்தியார். ஆனால் வாத்தியார் ஒன்றும் சொல்லவில்லை. கையில் இருந்த மலிவான சிகரெட் துண்டை, நோஞ்சானிடம் நீட்டிவிட்டு, கருமையான மையிருட்டில் வந்து கொண்டிருந்த அந்த உருவங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஐய...இந்தண்ட வா, அந்தண்ட.சேறு கீது," என்று ஒர் உருவம் சொல்லிக் கொண்டே, இரண்டு கைகளையும் பூமியில் ஊன்றித் தவழ்ந்து வந்தது. வந்தலர்களில் ஒருத்தி கிழவி. அவள் முதுகு, இடுப்பில் இருந்து, பூமிக்கு இணையான நேர்க்கோடு போல இருந்ததால், அவளை கூன்' என்று சொல்லவும் முடியாது. சொல்லாமலும் இருக்க முடியாது. வயது, அறுபதைத் தாண்டியிருக்கும். சரியான கண் தெரியாதவள் போல் தோன்றியது. இன்னொருத்திக்குப் பதினெட்டுதான் இருக்கும். உருண்டையான படர்ந்த முகம். நாமம் போட்டிருப்பது போல், ஒரு முடி நெற்றியிலிருந்து மூக்குத்தண்டு வரை நளினமாகப் படர்ந்திருந்தது. முழங்காலுக்கு மேலே இருந்த அந்த வனப்பிற்குத் திருஷ்டி பரிகாரமாக இரண்டு கால்களும், வெள்ளரிப் பிஞ்சு மாதிரி கூம்பி, செயலிழந்து கிடந்தன. இரண்டு முட்டுக்களிலும், தவழ்வதற்காக, தோல் மாதிரி ஏதோ ஒன்று கட்டப்பட்டிருந்தது. வந்தவர்கள் இருவரும், அவர்கள் அழைப்பிற்கு ஏங்கி நிற்பது போல, தாழ்வாரத்தின் அடியில், மண்ணில் நின்றார்கள். தாழ்வார ஆசாமிகள் வாத்தியார்' பேசுவார் என்று நினைத்து, அவன் முகத்தைப் பார்த்தார்கள். அவர் பேசாததால், ஒருவன் தன்னை டெம்பரரி வாத்தியாராக, தானாகவே அங்கீகாரம் செய்து கொண்டு "என்னாலே...ஒண்டுறதுக்கு வேற இடம் கிடைக்கல்ல?" என்றான் அதட்டலாக. அவனைக் கண்களால் அடக்கிக் கொண்டே, இப்போது வாத்தியார் பேசினான். "ஏய் கிழவி..இங்க, எங்களுக்கே இடமில்ல. தம்மாத்துண்டு