பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 163 இடத்துல தரிகினதத்தோம் பூடுறோம் நீங்க வேறயா? இத சத்திரமுன்னு நினைச்சிக்கினியா? யூடு குய்க்கா பூடு " "அப்படி சொல்லப்படாது நயினா. நாங்க திக்கத்தவங்க நீ தெய்வம் போல. அண்டிட்டேர்ம்...புண்ய முன்டு." "அந்தக் கதையே வாணாம். பொம்மனாட்டிங்களா இருக்கேன்னு பார்க்கிறேன். இல்லேன்னா, இந்நேரம். முதுகு பிஞ்சிருக்கும் மழைவிட்டதும் பூடணும்...நான் சொல்றது புரியதா?" "நீ சொல்றது புரியது நயினா. ஆனா எங்க பூறதுன்னு தான் புளியல?" "எங்கே காட்டியும் போ. ஆனால், இந்தண்டை ஜகா பூடலா முன்னு மட்டும் நெனக்காதே." "இந்தக் காலில்லாத நொண்டிப் பொண்ணுக்கும் ஒரு இடம் குடுப்பா ஒன்கு புண்யம் உண்டு!" வாத்தியார், கிழவிக்குப் பதில் சொல்லாமல், அந்தப் பெண்ணையே உன்னிப்பாகக் கவனித்தான். உடனே டெப்டி, அஸிஸ்டெண்ட் வாத்தியார்களும், அந்த மூவருக்கும் சேவை செய்வதற்காகவே பிறவியெடுத்த நோஞ்சான் பையனும், அந்தப் பெண்னைப் பார்த்தார்கள். அவள், இன்னும் மழையில் நனைந்து கொண்டிருந்தாள். முகம், வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது ஆயா இடம் பிடித்து விடுவாள் என்ற தன்னம்பிக்கையா அல்லது இடம் பார்த்துப் பெயராத கால்கள் எந்த இடத்தில் கிடந்தாலும் சரிதான் என்கிற விரக்தியா, எது அவள் முகத்தில் பிரதிபலித்தது என்பதைச் சொல்ல முடியாது. கிழவி, கெட்டிக்காரி. 'வாத்தியார்' மெளனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு, படியேறி, கையில் இருந்த ஒலைப்பாயை ஒரு ஒரமாகப் போட்டுவிட்டு, "காத்தாயி...வா மே.." என்று குரல் கொடுத்தாள். பிறரிடம் அடிபட்டதைத் தவிர, வேறு எதையுமே அறியாத, நோஞ்சான், கிழவியிடம் சண்டைக்குப் போனான். நீ படா கில்லாடிதான் கிழவி. வாத்தியார் சொல்லிக்கினே இருக்கார், நீ வந்துக்கினே இருக்கே படா தில்லுக்காரிதான்." வாத்தியார், நோஞ்சானின் பிடரியில் ஒன்று கொடுத்தான்.