பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 குற்றம் பார்க்கில் பிறகு, கிழவியைப் பார்த்து "எங்கிருந்து மே வர்ற?" என்றான். "அத ஏன் கேக்குற நயினா? நான் பூமில பொறந்திருக்கக் கூடாது. பொட்டுன்னாவது பூடணும். இவளோட ஆத்தா... எனக்குன்னு பொறந்து தொலச்தில் பிடிச்ச சனி, இன்னும் வுடல. எவனையோ இஸ்துகின்னு போயி, அப்புறமா என்கிட்ட 'வாயும், வயிறுமா வந்தா. நானும், பொறுத்துக்கினேன். ஆனால், கால் விளங்காத இவளை, கண் விளங்காத என்கிட்ட பூட்டுட்டுப் - "..."سا نابليو "செத்துப் பூட்டாளா.." "எவனோ ஒரு கஸ்மாலத்த கணக்குப் பண்ணிக்கினு ரயில்ல போயிட்டத பார்த்தாங்களாம் போனவா, போனவாதான். பதினைஞ்சு வருஷமாச்சு. சிவப்பா... குண்டா. அயகா இருப்பா... இப்போ, என்ன ஆனாளோ, எவன் கிட்ட மாட்டிக்கினு முழிக்கிறாளோ...மாரியாத்தாவுக்குத்தான் வெயிச்சம்..." "அப்போ...நீ தான் இத வளத்துக்குனு வர்றியா?" "அதை ஏன் கேக்குற? கூலிக்குப் போயி மாரடிச்சே என்னால முடியல. கட்சில, இவளோட காலக் காட்டி பிச்ச எடுத்தேன். இவளுக்கு விபரம் வந்ததும், பொழப்புல மண்ணைப் பூட்டுட்டா. கயிதக்கி கால காட்டுறது பிடிக்கல காட்டியும். ஒரு நாள் என்கிட்ட 'ஆயா.ஆயா... என் கால காட்டினா, ஒன்கு அர ருவாதான் கிடக்கிது. அதனால ஒரு விஷங்குடுத்து என்னக் கொன்னுடு: அப்போ என் பிணத்தக் காட்டினா பத்து ருவாயாவது தேறும். நீயும் ஒரு தொழில் செய்யலாம். என் காலுதான் உடம்பு மாதிரி ஆகப் போறதில்லை. உடம்பாவது காலுபோல ஆவட்டும். உனக்கும் பாரமில்ல'ன்னு சொன்னா. நான் ஒவுன்னு அயுதேன். இதப் பாத்துக்கினு நின்ன புண்ணியவான் ஒருவரு, எனிக்கு, ஆலந்துர்ல அவரோட பங்களாவுக்குள்ள் ஒரு குடிச பூட்டு தந்தாரு. இந்தப் பொண்ண அங்க வச்சிக்கினு, அவங்க வீட்டுலேய பாத்துக்கினு இருந்தேன்." "என்ன ஆச்சு?" "இவ هaان கேட்டுக்கு, திடீர்னு பெரியவளா ஆயிட்டா. எசமானுக்கு அறியாத வயசுல ஒரு பிள்ளை கீறான். அவன் முறைச்சா இவ என்ன பண்ணுவாள்? காலா இருக்கு, ஒடி