பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 165 ஒளியறதுக்கு? ஒரு நாள் எசமானி, 'என் பிள்ளையை உன் பேத்தி முறச்சிருப்பா போலிருக்கு. அதனாலதான் அவனும் மொறக்கிறான். வயகப் பையன் கெட்டுப்பூடுவான். ஜல்திய்ா இடத்தக் காலி பண்ணிட்டு மறு ஜோலி பாரு' ன்னு சொல்லிட்டா மகராசி." "அப்படியும் பொறுத்துக்கினுதான் இருந்தேன். ஆனால் இந்தக் கஸ்மாலம் இன்னா கேட்டா தெரியுமா? என் ஆத்தாதான் கெட்டுப் போனாள். இவளும் போகட்டுமேன்னு நீ அசால்ட்டா இருக்கியா'ன்னா. பொறுக்கலை. உடனே கூட்டிக்கிட்டு வந்துட்டேன். பெத்த பிள்ளைக்கிட்ட சொல்றது மாதிரி சொல்லிட்டேன் நயினா." "நானும் மன்ஷன் தான் ஆயா, உன் பேஜார கேட்டது, ஏதோ டிராஜிடி கஸ்மால சினிமாவப் பார்த்தது போல கீது. அதனால, இன்னிக்கு நைட்ல மட்டும் தங்கிக்கோ. ஆனால் நாளக்கி காலங் காத்தால சொல்லாம கொள்ளாம பூடனும், ஏன்னா இங்க செளரியப்படாது. டேய் பசங்களா, ஏதாவது கலாட்டா பண்ணுனிங்கன்னா, அப்புறமா, உங்க ஆத்தாளுங்களுக்கு புள்ளிங்களா இருக்க மாட்டிங்க. ஆமா, சொல்லிட்டேன்." 'வாத்தியார்' போய்விட்டான். மத்தியில் கிழிந்து போயிருந்த ஒலைப் பாயை, கிழவி, மடிப்பு’க் கலையாமல் விரிப்பதற்கு முயற்சி செய்தாள். 'உள்ளே வா காத்தாயி" என்று பேத்திக்கு ஒரு குரலையும், "ஏன் நய்னா அந்த பிள்ள பூட்டுது? இந்தண்ட தங்கறதில்ல?" என்று மூவருக்கும் ஒரு குரலையும் கொடுத்தாள். "எங்க வாத்தியார கேக்குறியா? அவருக்கென்ன, எத்தனையோ பணக்காரங்க என் கடை முன்னாடி படுத்துக்கோன்னு சொல்லி பணம் குடுக்கிறாங்க வாத்தியார் வைத்தின்னா' சிரிக்கிற குயந்தயும் அயும். இந்த ஏரியாவுல, அவரோட போட்டி போட ஆளு இல்ல." காத்தாயி, சிரமத்துடன், கைகளைப் படியில் ஊன்றிக் கொண்டு, அழகான குழந்தை மாதிரி தவழ்ந்து வந்தாள் கிழவியின் பக்கமாகப் படுத்துக் கொண்டாள். காத்தாயிக்குத் தூக்கம் வருகிற சமயம்- மூவரில் ஒருவனான டெப்டி-வாத்தியார், ஒரு துண்டை மடித்துக் கொண்டு வந்து, 'இதுல தல வச்சுக்கம்மே." என்று சொல்லி, காத்தாயியின் தலையைத்