பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 குற்றம் பார்க்கில் த்ாங்கிப் பிடித்துக் கொண்டு, மடித்த துண்டை வைத்தான், கருணையினால், அவன் அப்படிச் செய்வது போலத் தெரிந்தது. காத்தாயியும் ஒன்றும் பேசவில்லை. இது, இன்னொருவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். "இந்தாம்மே. இத போர்த்திக்கோ" என்று சொல்லிக் கொண்டே, ஒரு கிழிந்து போன போர்வையை எடுத்து அவள் மேல் போர்த்தினான். காத்தாயி, போர்வையின் ஒரு பகுதியை ஆயாவுக்கு மூடுவதற்குப் போராடிக் கொண்டிருந்த போது, தலையணை கொடுத்த ஆசாமி, நெருங்கி வந்து நல்லா மூடும்மே என்று குரல் கொடுத்துக் கொண்டே, அந்தப் போர்வையை, அவள் மேல் சமமாக இழுத்துப் போடுவது போல் பாசாங்கு செய்தான். அவன் கைகளில் ஒன்று அவள் உடம்பிற்கும் போர்வைக்கும் இடையே உரசியது. காத்தாயி, துள்ளிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். "கர்மம், அந்த பணக்கார புள்ளதான் கவல இல்லாம திங்ற ஜோர்ல கஸ்மாலமா நடந்துகின்னான்னு நெனச் சா. இங்க கூடவா? ஆயா, எழுந்துடு. இந்த இடத்துல ஒரு செகண்ட் கூட இருக்கப்படாது." தூங்கிக் கொண்டிருந்த கிழவி எழுந்தாள். நிலைமையை ஊகித்தவள் போல், "ஏன்டாப்பா, அனாதையா. பட்டமரம் மாதுரி நிக்றோம். வாலாட்றதுக்கு நாங்கதானா வாச்சோம்? வாத்தியாரு பிள்ளையாண்டான் இரக்கமுள்ளவனாத் தோணுது இருந்தும் எதுக்காவ இங்க தங்க செளகரியப் படாதுன்னு சொன்னான்னு நான் குழம்புதுைக்கு அர்த்தம் இப்போதான் புரியது.நீங்க சோதாப் பசங்கங்கறது..." "ஏம்மே இப்ப இன்னா தான் நடந்து போச்சி, லபோ லபோன்னு கத்துறே?" . காத்தாயியால் காத்திருக்க முடியவில்லை "வா ஆயா, ஜல்தியா பூடுவோம். நடு ரோட்ல படுப்போம்: லாரி மோதியாவது சாவோம். கிளம்பு ஆயா. நீ வர்றியா. நான் பூட்டுமா?" - கிழவி, ஒலைப்பாயைச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள். காத்தாயி, தவழ்வதற்காக உள்ளங் கைகளை ஊன்றப் போனாள். அவள் போவதைப் பொறுக்க முடியாத நோஞ்சான், அவள் கையைப் பிடித்து. தரதரவென்று இழுத்து, ஒரு மூலையில் போட்டான்.