பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 167 இன்னொருவன், "இந்த இருட்ல எங்க கண்ணு புறப்படுற" என்றான். ஆயா, கூப்பாடு போட்டுக் கூட்டத்தை எழுப்பவேண்டும் என்று நினைத்தாள். ஆனால், தொண்டைக்கு மேல் வார்த்தை வரவில்லை. இந்தச் சமயத்தில் தூரத்தில் சீட்டிச் சத்தம் கேட்டது. வாத்தியார்' வருவதைப் புரிந்து கொண்ட சிஷயர்கள் சப்த நாடியும் ஒடுங்கியவர்களாய் ஆளுக்கொரு மூலையில் பதுங்கினார்கள். 'வாத்தியார்' வந்தார்: பேட்டரி அடித்துப் பார்த்தார். பிறகு "இன்னா ஆயா, நீ பாயச் சுருட்டிக்கினு நிக்ற? பாப்பா அழுவது? சாமி சத்யமா நடந்தத. நடந்தபடியே சொல்லிடு. இந்த சோமாறிங்க கலாட்டிா பண்ணுாைங்களா? சொல்லு ஆயா!" 'இப்படித்தான் 'ஆயா சொல்லப் போகிறாள் என்பதை எதிர்பார்த்தவன் போல், வாத்தியார் இடுப்பில் இருந்த பெல்டைக் கழட்டிக் கொண்டே, சிஷ்யர்களைப் பார்த்தான். அழுது கொண்டிருந்த காத்தாயி, ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் கிழவி முந்திக் கொண்டாள். "இந்தப் புள்ளைங்க, ஒண்னும் பண்ணல நய்னா! சும்மா இல்லாத பொல்லாத சொல்லப்படாது. வாயி அயிவிடும். பங்களா குடிசையில் தூங்குன காத்தாயி, இந்தக் கல்லு மண்ணு இடத்துல தூங்க முடியாம அழுவுறா. அதோ, அவளுக்கு ஒரு புள்ள தலைக்கு ஒசரமாத் துணிகொடுத்தான். ஒரு புள்ள போத்திக்கத் தன் துப்ப்ட்டியைக் குடுத்திருக்கு. இது எல்லோருக்கும் பாரமா இருக்கோமேன்னு நெனச்சி அயுவது. இந்தப் புள்ளைங்க அவள தேத்திக்கினு இருக்காங்க...அவ்வளவு தான். நீ வந்துட்டே' வாத்தியார், தன் சிஷ்யர்களை ஒரு மாதிரி பார்த்தான். பிறகு, "இன்னிக்கு எப்படியோ சமாளி ஆயா. இன்னும் ரெண்டு நாள்ல, எந்தப் பணக்காரன் அண்டயாவது போயி ஒன்கு. பங்களாவுக்குள்ளே குடிசை போட்டுத் தரச் சொல்றேன். வீட்டு வேலையும் பார்த்துக்கலாம். நான் சொன்னா எவனும் தட்ட மாட்டான். நெஞ்சில் இருக்ற மஞ்சாச் சோற எடுத்துடுவேன்னு தெரியும். பாலஸ் ஸ்டோர்காரன், அவன் கடயண்ட படுக்கச் சொல்லி, கட்டில் போட்டிருக்கான். வேணும்னா, நானும் இங்க குந்தட்டுமா?"என்றான். "வேணாம் நயினா. இந்தப் புள்ளைங்க, காத்தாயிய கூடப்