பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 குற்றம்-பார்க்கில் சொன்ன மருந்தைச் சாப்பிட்டாளா?" "இன்னும் சாப்பிடலை." "காய்ச்சின இரும்புல தேனைவிட்டு, இஞ்சிச் சாறுல போட்டுக் குடிக்கச் சொல்லுடா. அதுக்கும் குணமாகலன்னா, ஆஸ்பத்திரியில போயி எக்ஸ்ரே எடு. நாளக்கழிச்சி உன் வீட்டுக்கு வருவேன். உன் வீட்டுக்காரிக்கு வயித்து வலி வந்துதோ படுவா உன்னை பிச்சுப்புடுவேன்." "இன்னைக்கே மருந்து கொடுக்கறேன், அண்ணாவி." அண்ணாவி இப்போது சற்று வேகமாக நடந்தார். தங்கையா முழங்கையில் கிடந்த துண்டை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு, சைக்கிள் பிடலை அழுத்தினார். அண்ணாவியின் எதிரே, காலேஜ் படிக்கும் ராமனும், அவனோடு இணைந்தாற்போல், ஹெல்த் விஸிட்டராகப் பணி புரியும் நளினாவும் வந்து கொண்டிருந்தார்கள். ராமன், கால்கள் பின் வாங்கின. கண்டும் காணாதது மாதிரி நடந்த அண்ணாவி, அவனை ஏறிட்டுப் பார்க்காமலே,"டேய் ராமா, மத்தியானம் என்னை வீட்டுல வந்து பாரு" என்றார். "சரிங்க லார்" என்ற பதிலைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலே, அவர் நடந்தார் நடந்தவர், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். ராமன் வளைய வந்து கொண்டிருந்தான். "டேய், உன்னை மத்தியானம் தானே வரச்சொன்னேன். இப்ப எங்க போகனுமோ அங்க போடா, மத்தியானம் வாடா." "பரவாயில்ல சார் காரணம் இல்லாமக் கூப்பிட மாட்டிங் களே. உங்களை விட எனக்கு யாரும் பெரிசில்ல." "யாரும்' என்ற வார்த்தையில் நளினா பதுங்கியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாவி, ராமனை நோட்டம் விட்டார். வயதானவர்களை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது மாதிரி பார்ப்பவர், இப்போது அவனை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் மேல்மட்டமாகப் பார்த்தார். ராமனின் கைகால்கள் ஆடின. "டேய் ராமா, நீ புத்திசாலிப் பையன். இப்ப உனக்கு முக்கியம் படிப்பத்தான். நீ அந்தப் பொண்ண விரும்புறதும், அவள் உன்னை விரும்புறதும் எனக்குத் தெரியும். அவளை, உனக்கே முடிச்சி