பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 13 கண்டந் துண்டமா வெட்டிப்புடுவேன். அப்படிப்பட்ட நானா உங்களுக்கு மரியாதை கொடுக்காம இருப்பேன்?" "பின்ன என்னடா! அவன் ராமசாமி, நாயா அலைஞ்சி நன்கொடை பிரிக்கிறான் சுய கெளரவத்த பெரிசா நினைக்கிறவன். அப்படிப்பட்டவனே அக்கம் பக்கத்துலே போயி பெரிய மனுஷங்க சின்ன மனுஷங்க அத்தனை பேரு கிட்டேயும் கால்ல விழாத குறையா கெஞ்சி பணம் பிரிக்கிறான் நீ அவன் வாங்குன மாட்டை, 'நன்கொடை மாடுன்னு சொல்றியாம் நீ அவனை அப்படிச் சொல்றதும், என்னைச் சொல்றதும் ஒண்ணுதாண்டா." "அண்ணாவி, நான் நன்கொடை விஷயமா கணக்கு இருக்கணுமுன்னுதான் சொன்னேன். ராமசாமியோட நாணயத்த சந்தேகிக்கல." "எனக்கு எல்லாந் தெரியும்டா ஆனால் ஒண்னு மட்டும் நினைச்சிக்கடா உன் போஸ்ட் மாஸ்டர் மவன் பேச்சியம்மைக்கு வந்த பணத்தை ரேகை போட்டு எடுத்துக்கிட்டான் அது அந்தக் கிழவிக்குத் தெரிஞ்சதும், ரிப்போர்ட் பண்ணப் போனாள் உடனே நீ என்கிட்ட வந்து விழுந்தே. நானும் ராமசாமிகிட்ட 'உன் சித்திக்கிட்ட சொல்லுடா'ன்னு சொன்னேன் அவனும், உன் கிட்ட இருந்த பழைய பகையை மறந்து சித்திக்காரியைச் சரிகட்டினான் இதெல்லாம் மறக்காதே. ராமசாமி மட்டும் இல்லன்னா, ஒன் மவன் இன்னும் கம்பி எண்ணிக்கிட்டிருப்பான் மனுஷனுக்கு நன்றி வேணுண்டா!" "அண்ணாவி, எந்தச் சல்லிப்பய மவனோ என்னப் பத்தி உங்ககிட்ட கலகம் பண்ணியிருக்கான். சாமி சத்தியமா நான் இந்த வம்புக்கே போகமாட்டேன். வேணுமுன்னா பாருங்க, தலையிட மாட்டேன் " "தலையிட மாட்டேன்னு சொல்லாதடா. அநியாயம் நடக்கும்போது தலையிடவேண்டியதுதான் ஆனால் நியாயத்த கேள்வி கேக்கக் கூடாது.டா! அவன் - ராமசாமி - நியாயஸ்தன் சரி, சரி ஹைஸ்கூலுக்கு உன் பணத்த எப்படா குடுக்கப்போற?" "இன்னும் நாலு நாளையில பருத்தி எடுக்கறேன். கொடுத்துடறேன் " "உன் வீட்டுக்காரி வயித்து வலியில துள்ளுனாளே, நான்