பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 குற்றம் பார்க்கில் அதற்கு அடையாளமாக, அண்ணாவி தலை மறைந்ததும், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார் அண்ணாவி "நமசிவாய நமக" என்ற சிவமந்திரத்தை முணு முணுத்துக் கொண்டே, மேனி குலுங்க நடந்தார். அவருக்கு எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த தங்கையா, கீழே இறங்கி, தோளில் கிடந்த துண்டை எடுத்து, முழங்கையில் போட்டுக் கொண்டார். "டேய் தங்கையா, ஒன் மவன் எனக்கு லெட்டர் போட்டிருக்காண்டா. பெங்களுர்ல போயி, அவன்கூட நான் ஒரு மாசம் தங்கனுமாம்." "போயிட்டு வாரதுதானே அண்ணாவி," "இப்போ அவன் பிளைட் ஆபீஸ்ரு என்கிட்ட படிச்ச நன்றியில் எழுதியிருக்கான் இந்தக் கிழவன் அங்க போயி எதுக்குடா சுமையா இருக்கணும்?" "என்ன அண்ணாவி நீங்க இந்த ஊருக்கே நீங்கதான் குலதெய்வம். எங்க குடும்பத்துக்கு நீங்க கடவுளு நீங்க கண்டிப்பா போகணும். அப்பதான் அவனும் உருப்படுவான் " சமீப காலமாக தன் மகன் பணம் அதிகமாக அனுப்பாமலும், ஏனோ தானோன்னு லெட்டர் போடுவதும், தங்கையாவைக் குடைந்து கொண்டிருக்கின்றன. அண்ணாவி போனால், மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், "நீங்க கண்டிப்பா போயிட்டு வரணும் அண்ணாவி நீங்க போனால் அவனுக்குத் தெம்பா இருக்கும்" எனறாா அண்ணாவி, தங்கையாவை ஒரக்கண்ணால் உற்று நோக்கிக் கொண்டே, "இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு மரியாதை கிடையாதுன்னு நாம சொல்லுறோம் ஆனால் ஒன் மவன் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனா இருந்தாலும் அவன் இந்த அன்னக்காவடி லாத்தியாருக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அவன் அப்பன் முதுகில புளியம் விளாரால நான் கொடுத்த அடியோட தழும்பு இன்னும் கிடக்கு ஆனால் அவனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலியே!" தங்கையா, துடித்துப் போனார் ஒரு தடவை முதுகைத் தடவி விட்டுக் கொண்டு, "என்ன அண்ணாவி, பூடகமா பேசlங்க நான் பெத்த மவனே உங்ககிட்ட மரியாதைக் குறைவா பேசினா அவனைக்