பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 குற்றம் பார்க்கில் இருபதாவது வயதில், வெளியூரில் இருந்து அங்கு வந்து ஊரோடு ஒன்றிவிட்ட அண்ணாவிக்கு, இரண்டு மூன்று ஆண்டுகளில் திருமணம் நடந்தது. அவர் மனைவியும், ஒரு லோயர் கிரேட் ஆசிரியை. ஊர்க்காரர்கள், அவருக்குப் பள்ளியருகே ஒரு வீடு கட்டித் தந்தார்கள். ஊரில் விளையும் வெள்ளாமையில் ஒரு பகுதி, தானாக வீடு தேடி வந்ததால், சம்பளப் பணத்தை என்ன செய்வதென்று பிரச்சினைகள் அண்ணாவிக்கு வந்ததுண்டு. கிணறு வெட்டப் போய், கிணற்றுக்குள்ளேயே விழுந்தவர்கள், பனைமரத்தில் இருந்து விழுந்த மரமேறிகள், மருமக்களால் கைவிடப்பட்ட கிழங்கள், கிழங்களால் நிராகரிக்கப்பட்ட மருமக்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு, அண்ணாவியின் பிரச்சினை ஒரு தீர்வாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பு வந்ததும், அண்ணாவி எஸ்.எஸ்.எல்.சி. எழுதி செகண்டரி கிரேடில் தேறி, அதே கிரேட் ஆசிரியரானார் அன்று முதல் இன்று வரை, பள்ளியை வளர்த்து, அந்த வளர்ச்சியில் தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஊரார்க்கு அவர்மீது இருந்த பிடிப்பும் வளர்ந்தது. இன்று வரை அவர்தான் பள்ளியின் தலைமையாசிரியர். பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள், அவரது முன்னாள் மாணவ மாணவிகள், இந்த வளர்ச்சியின் மத்தியில், அண்ணாவிக்கு ஒரு கடுமையான தளர்ச்சியும் ஏற்பட்டது. அவர் தோளோடு தோளாகப் பணிபுரிந்த, அவர் மனைவி ஒரு பையனைப் பரிசாக அளித்து, அந்தப் பரிசை மூன்றாண்டு காலம் பராமரித்து விட்டு, காலமாகிவிட்டாள். வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியையும், ஆக்க வழிக்குத் திருப்பினார். கவலையை மறப்பதற்காகவோ என்னவோ ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். முதியோர் கல்வித் திட்டத்தை, அரசாங்கம் தொடங்குவதற்கு முன்னதாகவே, 'ராப் பள்ளிக்கூடத்தை ஒரு ஹரிக்கேன் விளக்கின் முன்னணியில் நடத்தி 'கைநாட்டுகளை "அன்னாவி, ஒங்க கையெழுத்து, நல்லா இல்லியே" என்று உரிமையோடு செல்லமாகச் சொல்கிற அளவுக்கு உழைத்தார். இளமையிலே மனைவியை இழந்தாலும், அந்த இழப்பை, உழைப்பில் ஈடுசெய்தார். "அண்ணாவின்னா அண்ணாவிதான்" என்று வயது வந்தோரும், "அந்த ஆளு ஆம்பிளைதானா" என்று சில இளம் பெண்களும் சொல்கிற அளவுக்குத் தலைநிமிராமல்