பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 17 அவர் நடந்ததால் தலைகுனிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவருக்குச் சித்த வைத்தியமும், ஜோஸ்யமும் அத்துபடி. ஆகையால், அவர் வீடு, ஒரு மருத்துவ மனையாகச் செயல்பட்டது. அவர் தலையாட்டாமல் எந்தக் கல்யாணமும் நடக்காது. திண்ணையில் தவழ்ந்து, குடிசையில் எழுந்து, இப்போது கல் கட்டடத்தில் நடக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்த அண்ணாவியின் இதயம் நிறையுறவில்லை. எப்படியாவது ஒரு உயர்நிலைப் பள்ளி, தன் கண்முன்னாலேயே தோன்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தார். அதன் அவசியத்தை உணர்த்தி, பஞ்சாயத் திலும், யூனியனிலும் தீர்மானம் போடச் செய்தார். முப்பது ஆண்டுகால அனுபவத்தில் சந்தித்த கல்வி அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் சென்னை வந்து பெரிய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தார் அத்தனைபேரும், முறைப்படி விண்ணப்பிக்கும் மனு வந்தவுடனேயே, ‘சாங்ஷன்' அளித்து விடுவதாக வாக்களித்தார்கள். எப்படியும் உயர்நிலைப் பள்ளி வந்து விடும் என்ற நம்பிக்கையில், இப்போது கட்டிடவேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள்தொகை, அண்மையில் எந்த உயர்நிலைப்பள்ளியும் இல்லாத நிலைமை, போதுமான கட்டடங்கள், ஆகியவை பள்ளி கட்டாயம் வந்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, வழக்கம்போல் அண்ணாவியைப் பார்க்க வந்தார். கலெக்டரிடம் போய், ஹைஸ்கூல் பேப்பரை நகர்த்த வேண்டுமே! "நாளைக்கே கலெக்டர்கிட்ட போவேண்டா. நம்ம பையன் கலெக்டருக்கு 'ஸ்ட்ராங்கா' எழுதியிருக்கானாம். திருமலாபுரத்துக் காரங்க வேற நம்ம ஊர்ல ஏற்கனவே லைப்ரரி இருக்கிறதனிலே, அவங்க ஊர்லதான் ஹைஸ்கூல் வேணுமுன்னு கலெக்டருக்கு மனுப் போட்டிருக்காங்களாம். அவன் மனுப்போட்டு என்ன செய்ய முடியும்? நம்ம ஊர்ல ஹைஸ்கூலப் பார்க்காம இந்தக் கட்டை வேகாது நாளைக்கே போயிட்டு வந்துடுவோம். என் மவன். உடனே கலெக்டர பாருங்கன்னு', நேத்து லட்டர் போட்டிருக்கான்." பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, அண்ணாவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியும் ஒரு மனிதரா அவருடைய மகன். டில்லியில் மத்திய தகவல் சர்வீஸில் கிரேட் ஒன் ஆபீஸராக ..2.rملا۔ۃG