பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 குற்றம்-பார்க்கில் சொக்காரர்களாகக் கொண்டவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்பது, அவருக்கு அடிகொடுத்த பாடம் இவர் வீட்டு ஆட்டுக்குட்டி, காரை வீட்டுக்காரன் ஆறுமுகம் வயலில் மேய்ந்தால், ஆறுமுகம் பெரியப்பா பேரன் வந்து, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டுபோய், சமையல் செய்து விடுவான் இப்படிச் செய்யலாமா என்று முத்துப்புதியவன் கேட்பதில்லை 'ஆட்டைக் கொண்டு போய்த் தின்னதே தின்னான் நமக்கும் கொஞ்சம் கறி கொடுத்தி ருக்கலாமே என்றுதான் நினைத்துக் கொள்வார் இவர் வீட்டு வயலில், காரை வீட்டான் ஆடு மேய்ந்து, இவர் அதுமேல் ஒரு கல்லைப் போட்டால் போதும், காரை வீட்டுக்காரர்களின் வேலைக்காரர்கள் வந்து இவரை அடிப்பார்கள் இப்படி அடிபட்டு அடிபட்டு, உடம்பில் வைரம் பாய்ந்த முத்துப்புதியவன், ஊர்க்காரர்களைப் பகைக்காமல் அஞ்சி வாழ்வது பழக்கமாகிவிட்டது அப்போது சின்னப்பையனாக இருந்த முத்தையனிடம் ஆற்றாமையால் வெறுமையும் சினமும் மிஞ்சும், அதை அவன் மாடுகளின் முதுகில் காட்டுவான் முத்தையனுக்கு அப்போது முப்பது வயதிருக்கும் காரை வீட்டான் ஒருவன், நடுத்தெருவில், பெரியம்மாவை, புளியவிளாறால் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான் ஏதோ அவர்கள் தோட்டத்தில் ஒரு முருங்கைக்காயைப் பறித்துவிட்டாளாம். வண்டியை ஒட்டிக்கொண்டு வந்த முத்தையன், வண்டியிலிருந்து குதித்து, அடித்துக் கொண்டிருந்தவனை நாலு அறை போட்டுக் கீழே தள்ளி, தலையில் காலை வைத்துக் கொண்டான் இதைப் பார்த்த காரை வீட்டார்கள் முப்பது பேர் திரண்டு வந்தார்கள் வண்டியில் இருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு "ஏல, ஒரு அப்பனுக்குப் பிறந்தவங்கன்னா இங்க வாங்கடா , " என்று கர்ஜித்த முத்தையனைக் 'கை வைக்கப் பயந்து, விவகாரம் வைத்தார்கள் வயசுப் பயல் ஒருவன் மட்டும் சிலம்பு ஆடத் தெரிஞ்சவன் மாதிரி ஒரு கம்பைச் சுத்திக்கிட்டு வந்தான் முத்தையன் கோடாலிக் காம்பைப் பிடித்துக் கொண்டு அவனை நோக்கி ஓடியபோது, சென்னையில் சிலம்பு கற்ற அந்தச் சிலம்பன் வீட்டை நோக்கி ஓடினான் அன்றிலிருந்து முத்துப்புதியவன் வகையறாஆை காரை வீட்டார்கள் அடிப்பது கிடையாது இப்போது முத்தையனுக்கு நாற்பது வயதாகிவிட்டது வறுமையின் வெறுமையால் டி பி வந்து,