பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 குற்றம்-பார்க்கில் பிள்ளைகளையும் அடித்த காரை வீட்டார்கள், விழாவுக்கு வந்திருப்பதை ஒரு பெரிய கெளரவமாக நினைத்துக் கொண்டிருந்த முத்துப்புதியவனுக்கு முத்தையன் சொன்னது எரிச்சலைக் கொடுத்தது "என்ன பெரியய்யா, இந்தப் பயல்கள தலையில கை வைச்சி வெளிய தள்ளப் போறேன்" என்று வந்திருந்தவர்களுக்குக் கேட்கும்படி, சற்று உரக்கவே கத்தினான் முத்தையன் "முப்பழி செஞ்சி முத்தத்துக்கு வந்தவனைக் கூட வெளில போகச் சொல்லக் கூடாதுடா" என்று முத்துப்புதியவன் சொல்லி, தம்பி மகனின் ரத்தத்தைக் குளிர்ச்சியாக்கினார் முத்தையனுக்கு விழா கையைக் கடித்தது அவன் எதிர்பார்த்த எஸ்டிமேட்டை விடப் பணம் அதிகமாகச் செலவானது இதைப் பெரியய்யாவிடமோ, மனைவியிடமோ சொல்லவில்லை சின்னசாமியின் புகழ், அந்தக் கிராமத்தில் கொடிகட்டிப் பறந்தது அவன் ஜீப்பில் வருவதும், போலீஸ்காரர்கள் அவனுக்குப் பாரா கொடுப்பதுமாகி, முத்துப்புதியவன் ஒரு பெரிய மனிதர் ஆனார் காரை வீட்டுக்காரர்களும், அந்த ஒலை வீட்டிற்குள் சதா காத்துக்கிடந்தார்கள் முத்தையன் மாடுகளை விற்றுவிட்டதால், குழி வெட்டுற அளவுக்கு இருந்த நிலத்தை, குத்தகைக்கு அடைத்து விட்டு, மரம் வெட்டும் தொழிலில் முழுமூச்சாக இறங்கினான் சில சமயம் அவனைத் தேடி, சில ஆட்கள் சிபார்சுக்கு வருவார்கள் "எங்க சின்னப்பயகிட்ட சொல்லி முடிச் சுடுறேன். ஏன்னா, உம்ம விவகாரத்தில் நியாயம் இருக்கு அவன் செய்யாமலா போவான்" என்று முத்தையன் அடித்துப் பேசுவான் இரண்டு வருடங்கள் ஓடின முத்தையன், தோட்டத்திற்கு இரண்டு இளநீர் பறிக்கப் போயிருந்தான் அவன் பெரியய்யா முத்துப்புதியவன் மகன் வேலு, நான்கு ஆட்களை அவமானமாகப் பேசிக் கொண்டிருந்தான் அந்த நால்வரும் முத்தையனைப் பார்த்ததும் "பாரு முத்தையா இந்தப் பயலை எங்க மரத்தில மூன்று தேங்காய் மொத்து இருந்தது இன்னைக்கு இல்லியேன்னு சொன்னோம் அதுக்கு என்னை எப்படித் திருடன்னு சொல்லலா முன்னு கண்டபடி பேசுறான்" என்று கம்ப்ளெய்ண்ட் கொடுத்தார்கள் முத்தையன், வேலுவைக் கோபத்தோடு பார்த்தான் வேலு, அதைப் பொருட்படுத்தாதது போல், "எவண்டா பயல், முப்பத்திரெண்டு பல்லும் கீழே விழுந் துடும்" என்று பேசிக் கொண்டே போக,