பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குற்றம் பார்க்கில் முத்துப்புதியவன், வேலுவைப் பார்த்துவிட்டு, முத்தையனைப் பார்த்தார் நீண்ட மெளனத்திற்குப் பிறகு, "அதுக்காக அவனை நீ கை வைக்கிறதா?" என்றார் முத்தையன் இந்தப் பதிலைத் தாங்கிக் கொள்ள முடியாதவன் போல்," என்ன பெரியய்யா, நீரே இப்படிச் சொன்னா, நான் யாருகிட்ட சொல்றது? நான் இவனை லேசா தட்டாட்டா, அவங்க நாலுபேரும் இவனை உதைச் சிருப்பாங்க இவனை அடிச்சா, நான் பொறுத்துக்கிட்டு இருக்க முடியுமா?" என்றான் "நீ பெரிய யோக்கியன் போய்யா எங்க அண்ணனை, எப்பப் பார்த்தாலும் சின்னப்பய சின்னப்பயன்னு கண்டவங்க கிட்டல்லாம் சொல்ற இதுக்கே உன் முதுகுத் தோலை உரிக்கணும்" என்றான் வேலு முத்தையன் பரிதாபமாகப் பெரியய்யாவைப் பார்த்தான் அவர், மூட்டைப் பூச்சிகளை நசுக்கிக் கொண்டிருந்தார் வேலு விடவில்லை "உனக்கு சூடு சுரனை இருந்தா எங்க வாசற்படி மிதிக்கக் கூடாது சப்-இன்ஸ்பெக்டர் தம்பியை அடிச்சிட்டானாமுன்னு ஊர்ல கேவலமா பேசறாங்க ஏய்யா நிக்கற? மரியாதையா போ" என்றான் முத்தையன், "ஏல நாங்க பெரிய ஆட்கள் பேசுறோம் நீ பேசினன்னா பல்லை உடைச்சுப்பிடுவேன்" என்றான் உடனே, "உன்னைப் பத்தி என்னடா நினைச்சுக்கிட்டிருக்கே? மரியாதையா ஊர் ல ஒழுங்கா இருக்கனுமுன்னா 'அடிப்பேன் பிடிப்பேன்’ என்கிறதை வைச்சுக்காதே" என்று வேலு சொன்னான். "பெரியய்யா, அவன் பேசறதைப் பார்த்தீங்களா" என்று முத்தையன் முறையிட, முத்துப்புதியவன், "அவன் பேசறது தப்பா இருந்தா நான் கண்டிச்சிருக்க மாட்டேனா? என் பிள்ளையை நீ எப்படிடா கை வைக்கலாம்?" என்றார் முத்தையனுக்குப் பூமி சுழன்றது ஏதோ புரியாத ஓர் உலகில், பொல்லாத பிராணிகளிடம் இருப்பதுபோல் ஒரு பிரமை, என்ன சொல்வது என்று தெரியாமல், அவன் தவித்துக் கொண்டிருந்த போது, வேலு குறுக்கிட்டு, "ஏல. நீ வேட்டி எதுக்குடா கட்டனும்? நல்ல மனுஷனுக்கு ஒரு சொல், நல்ல மாட்டுக்கு ஒரு அடி இன்னும் நிக்கிறியே" என்றான் முத்தையனின் அங்கமெல்லாம் கோபாவேசம் கொண்டது வேலுவைப் போய்த் தலையைப் பிடித்தான் பிறகு, "உன்னை எடுத்த