பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க-சமுத்திரம் 39 பாசம் போகலடா வேற ஆளாக இருந்தால், இந்நேரம் குடலை உருவி தோள் மாலையாப் போட்டிருப்பேன்" என்று கத்த, முத்துப்புதியவன், "எங்க, என் மவனைத் தொடுடா பார்க்கலாம்" என்று கட்டிலிலிருந்து குதித்தெழுந்தார் "இந்தப் பய பிள்ளைகள மண்டையில தட்டுடா" என்று சொல்லும் பெரியய்யாவின் வார்த்தை, முத்தையனுக்கு மண்டையில் அடித்ததுபோல் இருந்தது எதுவும் பேசாமல் பொங்கிவந்த விம்மலை, துண்டை வாயில் வைத்து அடைத்துக் கொண்டே வெளியே போனான் இருக்கட்டும், சின்னப் பயகிட்ட சொல்லிக்கிடலாம் பாலைப் பார்க்கிறதா, பால் காய்ந்த பானையைப் பார்க்கிறதா? நான்கு நாட்கள் கழித்து, சின்னப்பபலிடம் சொல்வதற்காக, முத்தையன் ஒரு எட்டு முழ வேட்டியைக் கட்டிக் கொண்டு, சட்டைக்கு மேலே ஒரு 'மப்ளர்' துண்டைப் போட்டுக் கொண்டு கிளம்பப் போனான் அப்போது நான்கு போலீஸ்காரர்கள், அவன் கையில் விலங்கை மாட்டினார்கள், முத்துப்புதியவனையும், அவர் மகன் வேலுவையும் கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்தின்படி அவனைக் கைது செய்து தெருவில் நாயைப் போல் இழுத்துக் கொண்டு போனார்கள். முத்தையன் மனைவியால் ஒப்பாளி வைக்க முடியவில்லை துக்கப் பிரவாகம் அவள் இதயத்தை ஒரேயடியாக அழுத்தியதால் அழுகை நிவாரணம் அவளுக்குக் கிடைக்கவில்லை ஊரே வேடிக்கை பார்த்தது "நான் எங்க குடும்பம், எங்க குடும்ப முன்னு எப்போதும் பிரிச்சுப் பேசினேன் என் தம்பி அப்படிப் பேசக் கூடாதுன்னு, ரென்டு கைகளையும் சேர்த்து வச்சிட்டான். பரவாயில்லை. உடனே விலங்குமாட்டாம, அண்ணனை தள்ளலாமா, வேண்டாமான்னு நாலு நாளு யோசிச் சிருக்கான் டேய், வேடிக்கை பார்க்காதீங்கடா உங்கள ஒரே நாளுல தள்ளியிருப்பான் நான் என்கிறதினாலே நாலுநாள் யோசித்திருக்தான்." முத்தையன் புலம்பிக் கொண்டே திரும்பிப் பாராமல் நடந்தான். வேடிக்கை பார்த்த ஊரார், அந்தச் சிறிது நேர இரக்கத்தில், முத்தையனுக்காக வருத்தப்பட்டார்கள் 'சின்னப்பயல்’ என்று அவன் செல்லமாக அழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி, தன் * g。 ஊழியரான அந்த வட்டார சப்-இன்ஸ்பெக்டருக்கு டெலிபோனில் நன்றி சொன்னான்