பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவின் விலை சாந்தி அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் உறவின் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்தக் கடிதத்தை, தந்தையால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தோடு, அவள் மனம் அலையாகிக் கொண்டிருந்தது, வெளியறையில், ஓர் எசிசேரில் அவள் தந்தை சிவராமன் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தார் அரசாங்க வேலையிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு, அந்த எசிசேரிடம் அவர் தஞ்சம் புகுந்திருந்தார் அவரைப் போலவே, அந்த ஈசிசேரும் இற்றுப் போயிருந்தது சாந்திக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்ததில் அவருக்கு உள்ளுர மகிழ்ச்சி பம்பாயில் ஒரு மகளும், டில்லியில் இன்னொரு மகளும் நல்ல நிலையில் வாழ்வதும், தன் ஒரே மகன் நல்ல வேலையில் இருப்பதும், அவர் மனத்தின் நேர்மை கணக்கில் சேர்ந்த சேமிப்புகள், அந்த சேமிப்போடு கடைசிச் சேமிப்பையும் சேர்த்து விட்டால் அவர் தனது வாழ்க்கை அக்கெளண்டை முடித்து விடலாம் சாந்தி தயங்கித் தயங்கி அந்தக் கடிதத்தைக் கொடுத்தாள். எதிரே சோபாவில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அவர் மகன் , குமார், கடிதத்தையும் தந்தையையும் நோட்டம் விட்டான் வீட்டுப் பொறுப்புகளை சாந்தியிடம் ஒப்படைத்து விட்டு 'ஓய்வு பெற்ற' இருபத்திரண்டு வயது ராஜம்-குமாரின் மனைவி நேரத்தை எப்படிப் போக்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் கடிதத்தைப் படித்த சிவராமன் ஒரு பெருமூச்சோடு மகனிடம் அதை நீட்டினார் அவன் அதை மனைவிக்குக் கேட்கும்படி படித்தான். "அன்புள்ள அப்பாவுக்கு, மகள் கோமதி எழுதுவது, அநேக நமஸ்காரம் சாந்திக்கு எஞ்சினீயர் மாப்பிள்ளை கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் ஆனால், மாப்பிள்ளைக்கு என்னைவிட அதிக சந்தோஷம் ஆனால் "சாந்திக்கு பத்தாயிரம் நகையும், ஐயாயிரம் ரொக்கமும் கொடுக்கிற அளவுக்குப் பணம் இருக்கும் உன் வீட்டாருக்கு, உனக்குப் போட