பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு-சமுத்திரம் 41 வேன்டிய நகை பாக்கியைப் போட மறந்து போயிட்டோ? நான் என்ன இளைத்த மாப்பிள்ளையா?" என்று கேட்கிறார் அவருக்குப் பணம் பெரிதில்லை "வருகிற மாப்பிள்ளையை விட, வந்த மாப்பிள்ளை மட்டமா?" என்கிற மனப்பான்மை அவருக்கு உன் அப்பாவுக்கு எழுதி, போடுவதாகச் சொன்ன பாக்கி நகையை உடனே அனுப்பி வைக்கச் சொல், அப்போது தான் கல்யாணத்திற்குப் போக முடியும்" என்கிறார் நான் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது அவர் சொல்வதும் நியாயமாகப் படுகிறது அதே நேரத்தில் உங்களிடம் எழுதவும் தயக்கமாக இருக்கிறது இந்தப் பிரச்சினையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் " பம்பாய் அன்புள்ள மகள், கோமதி சிவராமனிடமிருந்து ஒரு விரக்திச் சிரிப்பு வெளிப்பட்டது "ஆஹா அவள் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாதாம்; நான்தான் அவளுக்கு அப்பாவாக இருந்திருக்கக் கூடாது எவ்வளவு லெளகீகமாக, அந்த லெளகீக ஊசியை ஆன்மீகப் பழத்தில் ஏற்றி எழுதியிருக்கிறாள்!" "குமார்! இதுக்குத் தாண்டா உன்னிடம் படித்துப் படித்துச் ச்ொன்னேன். அந்த நகைப் பாக்கியை அப்போதே தீர்த்து, கணக்கை முடித்திருக்க வேண்டும். கொண்டான் கொடுத்தானுக்கிடையில் பணம் குறுக்கே நிற்கக் கூடாது " மகனிடம் பேசிய தந்தை, ஆற்றாமையால் விம்மினார் தாலுக்கா ஆபீஸில், பணம் கொடுக்க வந்த எத்தனையோ நபர்களைப் புழுக்களைப் போலப் பார்த்த சிவராமன், மகனிடம் கை நீட்டிக் கேட்க வேண்டிய இயலாமையில் எழுந்த நெருப்பு ஜ்வாலையில் ஒரு புழுவைப் போலத் துடித்தார் குமார் ஒன்றும் பேசவில்லை அவனின் மெளனமே அவன் சொல்ல வேண்டியதைச் சொல்லிற்று இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது' என்று வாய்வரைக்கும் வந்த வார்த்தையை அடக்கிக் கொண்ட ராஜம், "இதுக்குத்தான் விரலுக்குத் தகுந்த வீக்கம் என்கிறது சாந்திக்கு நம்ம அந்தஸ்துக்குத் தக்க இடத்தில் பார்த்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது" என்று மாற்றிச் சொன்னாள் குமார் மெளனமாக அவள் கூற்றை அங்கீகரித்தான் தன் மகன் அவளைத் தடுத்துக் கேட்கவில்லை என்ற