பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 குற்றம்-பார்க்கில் மாப்பிள்ளைப் பையன் கொஞ்சம் 'பிகு செய்து கொண்டே மணப்பந்தலை நோக்கி வந்தான். "தாவி கட்டுகிற நேரம் வந்துடுத்து.சீக்கிரம், சீக்கிரம்..." என்றார் புரோகிதர். அவர் ஒருவர்தான் நடப்பதை நிதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். எத்தனையோ கல்யாணங்களை நடத்திவைத்த அவருக்கு இவையெல்லாம் ஒரு 'நியூலே இல்லை. "கெட்டி மேளம்" என்றார் புரோகிதர். மேளம் கொட்டியது. நாதஸ்வரங்கள் உச்சஸ்தாயியில் குரல் கொடுத்தன. மாப்பிள்ளை தாலியைச் சாந்தியின் கழுத்தை நோக்கி உயர்த்தினான். திடீரென்று கூட்டமே எழுந்தது. நாதஸ்வர வித்வான்கள் பாதி மூச்சை வாய் வழியாக விட்டார்கள். மேளத்தை அடிக்கும் கம்புகள் பாதியில் நின்றன. நடக்கக் கூடாதது - நடக்கும் என்று எதிர் பார்க்காதது நடந்து விட்டது. சாந்தியின் கழுத்தை நோக்கி வந்த தாலிச் சரட்டுக் கயிறு புரோகிதரின் வாயில் விழுந்தது. அவள் செய்கை, கூட்டத்தில் நிர்மலமான ஒரு நிசப்தத்தை நிலவச் செய்தது. யாரும் எதுவும் பேசவில்லை. அவமானத்தால் கண் சிவந்த சம்பந்தி, மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு, உறவு சூழ வெளியேறினார். உறவினர்கள் "இப்படி ஒரு பெண் இருப்பதை விட இறப்பதேமேல்" என்று முணுமுணுத்துக் கொண்டார்கள். சிவராமன் மகளை நோக்கி வந்தார். அவர் முகத்தில் சினமா. சிறுமையா, பீதியா எதுவென்று கண்டுகொள்ள முடியவில்லை. சாந்தியின் கண்களை நேராகச் சந்தித்தார். தந்தையின் கண்ணும் மகளின் கண்ணும் ஆன்மீகமாகப் பேசிக் கொண்டன. "சாந்தி நாள் அந்த ஆளின் காலில் விழுந்ததுபோல் உன் காலிலும் விழுந்து உன்னைச் சம்மதிக்க வைத்திருப்பேன். உன் காவில் விழவில்லை என்கிறாயா? நான் அப்படிச் செய்திருந்தாலும் உன்னை மணக்க அவர்கள் சம்மதித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், இந்த நாட்டில் மாப்பிள்ளை கோபிக்கலாம். ஆனால், மணப்பெண் கோபிக்க முடியாதம்மா." சிவராமன் துண்டை வாயில் வைத்தார். சாந்தி அவர் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தாள்