பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு_சமுத்திரம் 47 "மன்னித்துக் கொள்ளுங்கள் அப்பா பணத்தை கால் தூசியாக நினைத்த நீங்கள். அந்தத் தூசியின் காவில் விழுந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமல்ல, கணவன்-மனைவி என்ற புனிதமான உறவு, இரண்டாயிரம் ரூபாயில் தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை நினைக்கவே முடியல. என்னை மன்னிச்சிடுங்க அப்பா பணத்தைக் கொடுத்து, பந்தத்தை வாங்குவதைவிட உங்களையும், உங்களுக்குப் பிறகு கடவுளையும், நினைத்துக் காலத்தைக் கழித்துவிடுவேன். ஒரு வேளை நானும் திருமணத்திற்குப் பிறகு உங்களிடம் லெளகீக உறவை மட்டுமே வைக்க வேண்டியது இருக்கலாம். விலைகொடுத்து வாங்கும் பந்தத்திற்காக, விலை மதிக்க முடியாத இந்தப் பந்தத்தை வெட்டிக் கொள்ள மாட்டேன். இது சத்தியம் அப்பா." சிவராமன் மகளை நாலு அறை போடுவார் என்று நினைத்தவர்கள் ஏமாந்தார்கள். காலில் இருந்த முகத்தை நிமிர்த்தி தனது மார்பில் அனைத்துக் கொண்டார். வீடே அழுதது. டில்லிக்காரி விக்கி விக்கி அழுதாள். அவள் மாப்பிள்ளையின் கைக்குட்டை நனைந்தது. பம்பாய்க்காரி குப்புறப்படுத்து, தலையணையை ஈரமாக்கினாள், குமார் - ஒரு கம்பெனியின் பப்ளிக் ரிலேஷன் ஆபீலர் - பேமிலி ரிலேஷனின் விநோதத்தால் மனமார அழுதான். அவள் மனைவி எல்லோரையும் விட சத்தம் போட்டு அழுதாள். அவர்கள் அனைவரும் தங்கள் குற்ற உணர்வை அழுகையின் வாயிலாகக் கழுவாய் 磊*狩魔瓦 நினைத்தார்களோ? அல்லது அழுதுவிட்டால் அவர்கள் பொறுப்பு தீர்ந்துவிட்டதாய் எண்ணினார்களோ? ஆனால், சிவராமனும் சாந்தியும் அழவில்லை. அவர்களைக் கண்ணிரும் அனாதையாக்கியது.